50% மானியத்தில் டிராக்டர் வழங்கும் மத்திய அரசின் திட்டம்! இன்றே அப்ளை செய்யுங்க.!

Poonguzhali R
Poonguzhali R
Central Government scheme to provide tractor at 50% subsidy!

இந்தியா ஒரு விவசாய நாடு மற்றும் இந்திய விவசாயிகளுக்கு வசதியாக இந்திய அரசு பல்வேறு மானிய திட்டங்களை வழங்குகிறது. அந்த வகையில் மாநில அரசு வழங்கக் கூடிய ஒரு சிறப்பான திட்டத்தைக் குறித்துதான் இப்பதிவு விளக்குகிறது. அதாவது, 50% மானியத்தில் டிராக்டர் எவ்வாறு பெறுவது? அவ்வாறு பெற என்ன திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது? எவ்வாறு அந்த திட்டத்திற்குப் பதிவு செய்வது என்பவை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

இந்தியா ஒரு விவசாய நாடு மற்றும் அதன் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் விவசாயத்தை நம்பியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் விவசாய சகோதரர்கள் தங்கள் வயல், பயிர்களுக்கு மட்டும் செலவு செய்யாமல் விவசாய உபகரணங்களுக்கும் செலவழிக்க வேண்டியுள்ளது, விவசாயிகள் பயன்படுத்தும் முக்கிய விவசாய உபகரணங்களில் டிராக்டரும் ஒன்று.

டிராக்டர் விவசாயத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, அதே நேரத்தில் இது மிகவும் விலையுயர்ந்த விவசாய உபகரணமாகும், விவசாயிகள் டிராக்டரை வாங்குவதற்கு மிகப் பெரிய தொகையை செலவிடுகிறார்கள். இந்தப் பிரச்னையைச் சமாளிக்க புதிய டிராக்டர் வாங்குவதற்கு 50% வரை மானியம் வழங்குகிறது. இந்த நிலையைப் போக்கவும், விவசாயிகளுக்குப் பயனுள்ள வகையில் அமையவும் இந்திய அரசால் வழங்கப்படும் மானியத் திட்டம்தான் பிரதான் மந்திரி டிராக்டர் யோஜனா திட்டம் ஆகும்.

மேலும் படிக்க: டிராக்டர் லோன் எங்கு பெறுவது? எப்படி பெறுவது?

திட்டத்தின் நோக்கம்

  • இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் டிராக்டர் போன்ற விவசாய உபகரணங்களுக்கு மானியம் வழங்குவதாகும்.
  • இந்த திட்டத்தின் உதவியுடன் விவசாயிகள் மானிய விலையில் விவசாய உபகரணங்களை வாங்க முடியும்.
  • இது விவசாயிகளுக்கு மிகக் குறைந்த தொகையில் விவசாய உபகரணங்களை வாங்க உதவும்.
  • மேலும் இது இந்திய விவசாயிகளுக்கு சிறந்த வருமான வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்.
  • இத்திட்டம் அதிக நிலம் இல்லாத விவசாயிகளுக்கு அதாவது சிறுவிவசாயிகள்.
  • விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும், விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றவும் இந்த அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!

டிராக்டர் பெறத் தகுதி

  • விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
  • கடந்த 7 ஆண்டுகளில் விண்ணப்பிக்கும் விவசாயிகள் எந்த டிராக்டரும் வாங்கியிருக்கக் கூடாது.
  • விண்ணப்பதாரரின் பெயரில் நிலம் இருக்க வேண்டும்.
  • ஒரு டிராக்டருக்கு ஒரு முறை மட்டுமே மானியம் வழங்கப்படும்.
  • குடும்பத்தில் இருந்து ஒருவர் மட்டுமே டிராக்டர் மானியத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

தேவையான ஆவணங்கள்

மேலும் படிக்க: இனி உங்க காட்டில் பணமழைதான்! அதிக வருவாய் தரும் SB அக்கவுண்ட்!

திட்டத்தின் சிறப்பம்பசம்

மேலும் படிக்க:  TNUSRB SI Admit Card 2022 வெளியாகியது: நேரடி இணைப்பு உள்ளே!

விண்ணப்பிக்கும் செயல்முறை என்று பார்க்கும்போது, விண்ணப்பதாரர்கள் பொது சேவை மையங்களான CSC இன் உதவியுடன் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்படுகிறது. எனவே, விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.

மேலும் படிக்க

50% மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் பெறுவது எப்படி? இன்றே விண்ணப்பியுங்கள்!

ஃபிக்சட் டெபாசிட் (FD) வட்டி விகிதம் உயர்வு! மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

English Summary: Central Government scheme to provide tractor at 50% subsidy! Apply today! Published on: 13 June 2022, 11:21 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.