இன்றைய முதலீடு நாளைக்கான சேமிப்பு என்பதை எவரும் மறுக்க முடியாது. அதனால்தான் எதிர்காலத்திற்காக சேமிக்க வேண்டும் என்று சிறுவயது முதலே அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு எதிர்காலத்தில் நிதிப்பிரச்னை இல்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் எனக் கருதுபவரா நீங்கள்? அப்படியானால் இந்தத் திட்டம் உங்களுக்கு உகந்ததாக இருக்கலாம்.
மியூச்சுவல் ஃபண்ட்
இந்தத் திட்டத்தில் மாதம் ரூ.100 முதலீடு செய்தால் 5 வருடத்தில் ரூ.50,000 வரை லாபம் பெற முடியும். மியூசுவல் ஃபண்ட் (Mutual fund) என்பது முதலீடுகளை வருமானமாக ஈட்டும் சேகரிப்பாகும். ஒரு முதலீட்டாளர் இந்த மியூட்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்வதன் மூலம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தங்கள் பணத்தை சேகரிக்கின்றனர்.
நிதி மேலாளர் அல்லது போர்ட்ஃபோலியோ (Portfolio) மேலாளர்களால் இந்த நிதி நிர்வகிக்கப்படுகிறது.
எப்படி செயல்படுகிறது?
பத்திரங்கள், பங்குகள், தங்கம் மற்றும் பிற சொத்துக்களில் முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட இந்த திட்டங்களில் முதலீடு செய்து சாத்தியமான வருமானத்தை அடைய முடியும். இந்த முதலீட்டின் ஆதாயங்கள் முதலீட்டாளர்கள் நிதிக்கு அவர்களின் பங்களிப்பின் விகிதங்கள் கூட்டாக பகிர்ந்தளிக்கப்படுகின்றன.
100 ரூபாய்க்கான டாப் சிப் (SIP) ஃபண்டுகள்:
100-sip-
-
நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் ஃபண்டு (Nippon India Large Cap Fund)
-
ஐசிஐசிஐ புருடென்ஷியல் புளூசிப் ஃபண்ட் (ICICI Prudential Bluechip Fund)
-
இன்வெஸ்கோ இந்தியா குரோத் ஆப்பர்ச்சுனிட்டு ஃபண்ட் (Invesco India Growth Oppertunities Fund)
-
ஆதித்யா பிர்லா சன் லைஃப் ஃப்ளெக்சி கேப் ஃபண்ட் (Adhitiya Birla Sun Life Flexi Cap Fund)
இவற்றில் ஏதாவது ஒன்றில் நீங்கள் ரூ.100 முதலீடு செய்தால், அது 5 ஆண்டுகளுக்குப்பிறகு ரூ.50,000 வருமானமாகத் திரும்பி வரும் வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க...