1. மற்றவை

குறைந்த முதலீடு, ரூ.6 லட்சம் வரை வருமானம்-சோப்பு வச்சே சம்பாதிக்கலாம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
With low investment, you can earn up to Rs. 6 lakhs with soap!

நீங்கள் சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்க விரும்பினால் உங்களுக்காக ஒரு சூப்பர் வாய்ப்பு உள்ளது. சோப்பு உற்பத்தியில் நல்ல லாபம் உள்ளது. இதில் உங்களுக்கு அரசின் உதவியும் கிடைக்கும். இந்த தொழிலில் இயந்திரம் மூலம் சோப்பு தயாரிக்கப்படுகிறது. சோப்பு தயாரித்த பிறகு அது சந்தைப்படுத்தப்பட்டு மார்க்கெட்டிற்குக் கொண்டு செல்லப்படுகிறது.

குறைந்த முதலீட்டில் சிறந்த தொழிலாகச் செய்யலாம். இந்தத் தொழிலில் வருமானம் நிரந்தரமாகக் கிடைக்கும். ஏனெனில், இதற்கான தேவை சந்தையில் இப்போது அதிகமாகவே உள்ளது. இந்த வாய்ப்பு உங்களை மிகப் பெரிய தொழிலதிபராகவும் மாற்றும்.

சோப்பு வகைகள்!


இந்தியாவில் பலவிதமான சோப்புகள் பயன்பாட்டில் உள்ளன. சோப்புக்கான சந்தையை அதன் பயன்பாட்டின் அடிப்படையில் பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம். சலவை சோப்பு, அழகு சோப்பு, மருந்து சோப்பு, பாத்திரம் கழுவப் பயன்படுத்தப்படும் சோப்பு, வாசனை திரவிய சோப்பு போன்ற பல வகைகள் உள்ளன.நம் பகுதியில் உள்ளத் தேவையைக் கருத்தில்கொண்டு,
இதில் ஏதேனும் ஒரு வகையைத் தேர்ந்தெடுத்து அதை உற்பத்தி செய்யலாம்.


தேவைப்படுபவை

  • சோப்பு தயாரிக்கும் ஆலையை அமைக்க உங்களுக்கு மொத்தம் 750 சதுர அடி இடம் தேவைப்படும்.

  • சோப்பு உற்பத்திக்குத் தேவையான அனைத்து வகையான இயந்திரங்களையும் வைக்க இந்த இடம் போதுமானதாக இருக்கும்.

  • இந்த இயந்திரங்களை நிறுவ மொத்தம் ரூ.1 லட்சம் வரையில் செலவு செய்ய வேண்டும்.

  • சோப்பு உற்பத்தி ஆலையை அமைக்க மொத்தம் ரூ.15.30 லட்சம் வரையில் செலவாகும். இ

  • தில் ரூ.3.82 லட்சத்தை மட்டுமே நீங்கள் செலவிட வேண்டியிருக்கும்.

  • எஞ்சிய மீதித் தொகையை முத்ரா திட்டத்தின் கீழ் கடனாகப் பெறலாம்.

நிதியுதவி

மத்திய அரசின் முத்ரா திட்டத்தின் உதவியுடன், ஒரு வருடத்தில் சுமார் 4 லட்சம் கிலோ சோப்பு உற்பத்தி செய்ய முடியும். இதன் மொத்த மதிப்பு ரூ.47 லட்சம் இருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், அனைத்துச் செலவுகளுக்குப் பிறகு மாதம் ரூ.6 லட்சம் பெறுவீர்கள். அதாவது மாதம் ரூ.50,000 கிடைக்கும். சிறு தொழில் செய்பவர்கள் மற்றும் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையிலேயே மத்திய அரசின் இந்த முத்ரா கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

லாபம் அதிகம்

சோப்புக்கான தேவை சிறிய நகரங்கள் முதல் பெரிய நகரங்கள், கிராமங்கள் என பல தரப்பிலும் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், சோப்பு தயாரிக்கும் தொழில் உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும். மிகக் குறைந்த முதலீட்டில் சோப்புத் தொழிற்சாலையைத் திறக்கலாம். இந்த தொழிலைத் தொடங்க மத்திய அரசின் முத்ரா திட்டத்தின் கீழ் 80 சதவீதம் வரை நீங்கள் கடன் பெறலாம்.

மேலும் படிக்க...

இதைச் செய்யாவிட்டால் உங்கள் PAN Card முடக்கப்படும்!

பல்கலைக்கழகப் பணியாளராக விருப்பமா? உடனே விண்ணபிங்க!

English Summary: With low investment, you can earn up to Rs. 6 lakhs with soap! Published on: 24 February 2022, 10:45 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.