Others

Wednesday, 13 July 2022 10:34 AM , by: Poonguzhali R

New Rule for Buying Ration Items!

கொரோனா காலத்திற்குப் பின்பு அரசு மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்கத் தொடங்கி இருக்கின்றது. இந்நிலையில் ரேஷன் வாங்குவதில் பொது மக்களுக்குச் சிக்கல் ஏற்பட்டால் அதைத் தீர்க்கும் நிலையில் புதிய விதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது, அரசு. அந்த விதி குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

கொரோனா காலத்திற்குப் பின்பு, அரசானது மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கத் தொடங்கியது. இதற்கு மத்திய அரசால் பிஎம் கரிப் கல்யாண் யோஜனா என்று பெயரும் இடப்பட்டது. இந்த திட்டத்தின் பலன்களைப் பெற, நீங்கள் ரேஷன் வைத்திருப்பது கட்டாயம். ஆதார் அட்டை மூலமாகவும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறப்படுகின்றது.

மேலும் படிக்க: மக்களே உஷார்! சிலிண்டர் மானியம் கிடைக்கவில்லையா? உடனே இதை செய்யுங்க!

அந்த வகையில், நீங்களும் தகுதியுடையவராக இருந்தும் இத்திட்டத்தின் பலனைப் பெற முடியாமலோ அல்லது இலவச ரேஷன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டாலோ இனி கவலைக்கொள்ளத் தேவையில்லை, வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் எளிதாக புகார் செய்யலாம் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும் பெறப்படாத ரேஷன் பொருட்களை உங்கள் வீட்டிற்கு இலவசமாக எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் படிக்க: 50% மானியம் வேண்டுமா? நாட்டுக்கோழி வளர்ப்புக்கு இன்றே பதிவு செய்யுங்கள்!

எவ்வாறு புகார் செய்வது?

ரேஷன் கிடைக்காத பட்சத்தில் இணையதளம் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அதோடு, புகார் தெரிவிக்க ஹெல்ப்லைன் எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மின்னஞ்சல் மூலம் புகார் செய்ய, உங்கள் புகாரை எழுத வேண்டும். இச்செயல் முறையினைச் செய்யும் போது, ரேஷன் கார்டு எண் மற்றும் ரேஷன் டிப்போவின் பெயர் ஆகியவற்றை உள்ளிடுதல் வேண்டும். இரண்டு தகவல்களும் அடையாளத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைனில் புகார் செய்வது எப்படி?

அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் www.tnpds.gov.in புகார் செய்யலாம்.

மேலும் படிக்க: ஆடு வளர்ப்புக்கு ரூ. 4 லட்சம் தரும் மத்திய அரசின் திட்டம்!!

கட்டணமில்லா எண்ணில் புகார் எவ்வாறு செய்வது?

  • அரசு இலவச போன் எண்ணையும் அளித்துள்ளது. கட்டணமில்லா எண்ணில் புகார் பதிவு செய்ய, (1800 425 5901) என்ற எண்ணை அழைக்க வேண்டும். அப்படியும் பலன் கிடைக்கவில்லை என்றால், அலுவலக முகவரிக்குச் சென்று புகார் கொடுக்கலாம் எனக் கூறப்படுகிறது.
  • www.tnpds.gov.in என்ற உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகாரினைப் பதிவு செய்யலாம் எனக் கூறப்படுகின்றது. எனவே, இனி சரியான அளவில், சரியான நேரத்தில் ரேஷன் பொருட்களைப் பெற்றுப் பயனடையுங்கள்.

மேலும் படிக்க

சிறுபான்மையினருக்கு மானியம்! செஞ்சி மஸ்தான் அறிவிப்பு!

மல்லிகை பூ சாகுபடியும் அதன் வழிமுறைகளும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)