1. செய்திகள்

மக்களே உஷார்! சிலிண்டர் மானியம் கிடைக்கவில்லையா? உடனே இதை செய்யுங்க!

Poonguzhali R
Poonguzhali R
Cylinder Subsidy not Getting? Do this Immediately!

வீட்டு உபயோகத்திற்காகப் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியமாகக் குறிப்பிட்ட தொகையை வழங்குகின்றது. இந்த மானியம் உங்களது வங்கிக்கணக்கில் வருகிறதா என்பதைக் குறித்தும் வருவதற்கு என்னென்ன வழிமுறைகளைச் செய்ய வேண்டும் என்பதைக் குறித்தும் இப்பதிவு விரிவாக விளக்குகிறது.

சிலிண்டர் மானியம்

நாடு முழுவதும், வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மத்திய அரசு குறிப்பிட்ட தொகையினை மானியம் வழங்கி வருகின்றது. அந்த வகையில், தொடர்ந்து அதிகரித்து வரும் சிலிண்டர் விலைக்கு மத்தியில் இந்த மானியத் தொகை பலருக்கு உதவியாக இருந்து வருகின்றது. எனினும், ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் பெறுபவர்களுக்கு இந்த மானியப் பலன்கள் பொருந்தாது எனக் கூறப்பட்டது. பொதுவாக, இந்த மானியத் தொகை முதல் முறையாக சிலிண்டரைப் பெற்ற பிறகு பயனரின் வங்கிக் கணக்கில் நேரடியாக மாற்றப்படும்.

மேலும் படிக்க: 50% மானியம் வேண்டுமா? நாட்டுக்கோழி வளர்ப்புக்கு இன்றே பதிவு செய்யுங்கள்!

ஆனால், சிலிண்டர் பெறும் பயனாளிகளுக்கு மானியம் கிடைக்கவில்லை என சமீபக் காலங்கலாகப் புகார் எழுந்தன. அதாவது, சிலிண்டர் விலை 1000-ஐத் தாண்டும் நிலையில், மானியம் கிடைக்காமல் பலர் சிரமப்படுகின்றனர். எனவே வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை சிலிண்டரை முன்பதிவு செய்யும் பொழுதும் அவர்களின் வங்கிக் கணக்கில் மானியத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்த்துத் தெரிந்துகொள்வது அவசியம் ஆகும். இந்நிலையில் ஆன்லைனில் எவ்வாறு இதை அறிந்துகொள்ளலாம் எனபதைக் குறித்துப் பார்க்கலாம்.

மேலும் படிக்க: ஆடு வளர்ப்புக்கு ரூ. 4 லட்சம் தரும் மத்திய அரசின் திட்டம்!!

சிலிண்டர் மானியம் பெற வழிமுறைகள்

  • முதலில் Mylpg.in இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அங்கு இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி கேஸ் ஆகிய மூன்று சிலிண்டர் நிறுவனங்களின் புகைப்படம் இருக்கும்.
  • அவற்றில், நீங்கள் பயன்படுத்தும் சிலிண்டர் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • திறக்கும் புதிய பக்கத்தில் உள்ள மெனுவிற்குச் சென்று ‘உங்கள் கருத்தை ஆன்லைனில் வழங்கவும்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • இந்த பக்கத்தில் வாடிக்கையாளர் மொபைல் எண், வாடிக்கையாளர் ஐடி, மாநிலத்தின் பெயர், விநியோகஸ்தர் போன்ற விவரங்களை நிரப்புதல் வேண்டும்.
  • அதன் பின்பு, ‘கருத்து வகை’ என்பதைக் கிளிக் செய்து, புகார் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • இப்போது அடுத்து என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது உங்கள் வங்கி விவரங்கள் புதிய பக்கத்தில் தெரிய வரும்.
  • மானியத் தொகை உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதா இல்லையா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

தற்பொழுது மானியம் கிடைக்கவில்லை என உறுதியானால் வாடிக்கையாளர்கள் 18002333555 என்ற இலவச எண்ணில் புகார் தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது. இந்த வழிமுறைகளைப் பயன்படுத்திச் சிலிண்டர் மானியத்தைப் பெற்றுப் பயனடையுங்கள்.

மேலும் படிக்க

நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது! அரசுக்குக் கோரிக்கை!!

சிறுபான்மையினருக்கு மானியம்! செஞ்சி மஸ்தான் அறிவிப்பு!

English Summary: Cylinder Subsidy not Getting? Do this Immediately! Be Careful People! Published on: 13 July 2022, 09:55 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.