Others

Tuesday, 31 May 2022 06:55 PM , by: Elavarse Sivakumar

பிரதமரின் PM CARES திட்டத்தில் குழந்தைகளுக்கு மாதம் 4,000 ரூபாய் வழங்கப்படுகிறது. குறிப்பாகக் கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில், அந்தக் கொடுந்நோயால், பெற்றோரை இழந்தக் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டே இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே இந்தத் தொகையைப் பெற குழந்தைகள் விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்துப் பார்க்கலாம்.

அறிமுகம்

கொரோனா பாதிப்பு காலத்தில் 2020 மார்ச் 11 முதல் 2022 பிப்ரவரி 28 வரை கொரோனாவால் இரண்டு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் (PM CARES for Children) திட்டம் தொடங்கப்பட்டது.

ரூ.10 லட்சம் நிதி

இத்திட்டத்தின் கீழ் சிறுவர்கள் 23 வயதை எட்டும்போது 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். மேலும் கல்வி உதவித் தொகை, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பலன்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும், கொரோனாவால் பெற்றோரை இழந்த பள்ளிக் குழந்தைகளுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கினார். அவர்களுக்கு திட்டத்துக்கான பாஸ்புக் வழங்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் மருத்துவ அட்டைகளும் வழங்கப்பட்டன.

ரூ.4,000

பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு மாதம் 4000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். மேலும், ஆயுஷ்மான் பாரத் மருத்துவ அட்டையை பயன்படுத்தி 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

  • இந்த https://pmcaresforchildren.in/ இணையதளத்துக்கு செல்லவும்.

  • அதில் குழந்தைகள் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

  • அரசு ஒப்புதல் கிடைத்தபின் குழந்தைகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக பணம் உள்ளிட்ட திட்டத்தின் பலன்கள் வந்துசேரும்.

மேலும் படிக்க...

கைரேகைக்கு பதிலாக கருவிழிப்பதிவு- ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை!

ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)