1. மற்றவை

TNPSC Group 4 VAO தேர்வு- வெற்றி பெற எளிய டிப்ஸ்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
TNPSC Group 4 VAO Exam- Simple Tips To Win!

TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், பரிட்சை எழுத முழுமனதுடன் தயாராக வேண்டியது அவசியம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு நடப்பு ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழ் மொழி பாடப்பகுதியில் 95 மதிப்பெண்களுக்கு மேலே பெற தேர்வர்களுக்கு சில டிப்ஸ்கள் இந்தத் தகவலில் வழங்கப்படுகின்றன.

குரூப் 4 தேர்வு:

TNPSC தமிழக அரசுத்துறைகளில் உள்ள 4ம் நிலை பணியிடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது. இந்த தேர்வு 7,301 காலிப்பணியிடங்களை நிரப்ப நடைபெறவுள்ளது. மேலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மார்ச் 30 முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, 21 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த குரூப் 4 தேர்வானது இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் ஆகிய 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது.


TN Job FB Group 

இந்த பணியிடங்கள் ஒரே ஒரு எழுத்துத் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்படுகிறது. இந்த தேர்வை எழுத பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே தகுதி என்பதால் கடும் போட்டி இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.கடந்த 2 ஆண்டுகளாக போட்டித் தேர்வுகள் நடைபெறாததால் இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கு கூடுதலாக 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த வகையில், குரூப்- தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்யப்பட உள்ளது. அதன்படி எழுத்துத் தேர்வு 2 பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழி தகுதித்தேர்வு. இதில் 100 வினாக்கள் கேட்கப்படும். இதில் குறைந்தப்பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் தான் விடைத்தாள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும்.

95+ எடுக்க 

  • தமிழ் மொழிப்பாடப்பிரிவில், தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

  • இதற்கு 6 ஆம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான தமிழ் பாடத்தை படிக்க வேண்டும்.

  • நூல், நூலாசிரியர் தொடர்பாக அதிக வினாக்கள் இடம்பெறுவதால், அதை நன்றாக படித்துக் கொள்ள வேண்டும்.

  • செய்யுள் வரிகள் இடம்பெறும் வினாக்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் மனப்பாட செய்யுள் பகுதிகளிலிருந்து கேட்கப்படுவதால், செய்யுள் பாடல்களை மனப்பாடம் செய்து, அதற்குரிய நூல், நூலாசிரியர் விவரங்களை படித்துக் கொள்ள வேண்டும்.

  • உரைநடைப் பகுதியில், ஹைலைட் செய்யப்பட்ட தகவல்களை நன்றாக படித்துக் கொள்ள வேண்டும், அறிவியல் சார்ந்த மற்றும் ஆண்டுகள் குறிப்பிடப்பட்ட வினாக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

  • இலக்கணம் பகுதியைப் பொறுத்தவரை, இலக்கணப் பகுதியை மனப்பாடம் செய்யாமல், புரிந்து படித்துக் கொள்ள வேண்டும்.

  • அப்போது தான், பாடப்புத்தகத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்ட நிலையிலும், அதற்கான விடை மறந்திருந்தால், உங்களால் விடையளிக்க முடியும்.

  • படித்தப் பாடங்களை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு படித்தால் நிச்சயமாக 95 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கலாம்.

மேலும் படிக்க...

ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!

Indian Air Forceஸில் வேலை - பிளஸ் 2 படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

English Summary: TNPSC Group 4 VAO Exam- Simple Tips To Win! Published on: 30 May 2022, 04:02 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.