1. செய்திகள்

கைரேகைக்கு பதிலாக கருவிழிப்பதிவு- ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Iris instead of fingerprint- New practice in ration shops!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அமலில் உள்ள கைரேகைப் பதிவு, வாடிக்கையாளர்களுக்கு பெரும் சிரமத்தை அளித்து வருகிறது. இந்நிலையில், கைக்கு பதிலாக கண்ணைப் பதிவு செய்ய முடிவு செய்திருக்கிறது அரசு. தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இந்த முடிவு ரேஷன் அட்டைதாரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

ரேஷன் பொருட்கள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்கள், நிவாரண உதவிகள் உள்ளிட்டவைகளும் ரேஷன் கடைகள் வாயிலாகவே வழங்கப்பட்டு வருகின்றன.

மோசடிகளைத் தடுக்க

ற்போது ஸ்மார்ட்கார்டுகள் வழங்கப்பட்டு பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதில் உள்ள க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்யப்பட்டு, அதில் காட்டப்படும் பெயர்களில் உள்ளவர்கள் மட்டுமே கைரேகை பதிவு மிஷினில் விரல் வைத்து கைரேகை ஸ்கேன் செய்து பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

தொழில் நுட்ப சிக்கல்

ஆனால் சில நேரங்களில் பயோமெட்ரிக் இயந்திர கோளாறு காரணமாக பொருட்கள் விநியோகம் செய்வதில் சிக்கலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும், இதில் சில குளறுபடிகளும் நடப்பதாக கூறப்படுகிறது. எனவே, இந்த முறை சரியாக நடக்கிறதா என்பதை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கண்காணித்து வருகிறது.

அமைச்சர் தகவல்

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கைரேகை பதிவுக்கு பதில் கண் கருவிழி பதிவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரேஷன் கடைகளில் பதிவின் அடிப்படையில் பொருட்கள் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, ரேஷன் கடைகளில் பரிசோதனை அடிப்படையில், கைரேகைக்கு பதிலாக கண் கருவிழி சரி பார்ப்பு முறை அமல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின் போது அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!

Indian Air Forceஸில் வேலை - பிளஸ் 2 படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

English Summary: Iris instead of fingerprint- New practice in ration shops! Published on: 30 May 2022, 10:30 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.