பல லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் சம்பள உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு பற்றி தற்போது மிக முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.
அகவிலைப்படி
ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பணவீக்கத்தால் விலைவாசி உயருகிறது. விலை ஏற்றத்தை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்தப்படும். மத்திய அரசு ஊழியர்களுக்கு கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அப்போது அகவிலைப்படி விகிதம் 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து, அடுத்து எப்போது அகவிலைப்படி உயர்த்தப்படும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
இந்நிலையில், வரும் மார்ச் மாதம் அடுத்து அகவிலைப்படி உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஹோலி பண்டிகையை ஒட்டி அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை அகவிலைப்படி 41% ஆக உயர்த்தப்படும் எனவும் கூறப்படுகிறது. அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டால் சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு அன்று அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதன்படி தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தற்போது அகவிலைப்படி 38% ஆக உயர்ந்துள்ளது.
மேலும் படிக்க
அரசு ஊழியர்களுக்கான பென்சன் திட்டம்: வட்டி விகிதம் உயர்வு!
EPFO வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு: ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கும் வழிமுறைகள் இதோ!