1. செய்திகள்

அரசு ஊழியர்களுக்கான பென்சன் திட்டம்: வட்டி விகிதம் உயர்வு!

R. Balakrishnan
R. Balakrishnan
Pension scheme

அரசு ஊழியர்களுக்கான பென்சன் திட்டங்களுக்கு வட்டி விகிதங்கள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜிபிஎஃப், பங்களிப்பு பென்சன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பென்சன் திட்டங்களுக்கு ஜனவரி - மார்ச் காலாண்டுக்கு வட்டி விகிதத்தை 7.1% என எந்த மாற்றமும் இல்லாமல் அறிவித்துள்ளது நிதியமைச்சகம்.

பென்சன் வட்டி உயர்வு (Pension Interest Hike)

மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள தீர்மானத்தின்படி, ஜிபிஎஃப் மற்றும் இதர பென்சன் திட்டங்களுக்கு 2023 ஜனவரி - மார்ச் காலாண்டுக்கு 7.1% என்ற விகிதத்தில் வட்டி தொடர்ந்து இருக்கும் நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பென்சன் திட்டங்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 7.1% வட்டி அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. இதில் ஜிபிஎஃப் (GPF - General Provident Fund) திட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமானது.

இத்திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை செலுத்த அனுமதிக்கப்படுகிறது. ஊழியர்கள் செலுத்தும் தொகையும், வட்டியுடன் சேரும் தொகையும் மொத்தமாக ஊழியர்கள் பணி ஓய்வுபெறும்போது அவர்களுக்கு செலுத்தப்படுகிறது. ஜிபிஎஃப் திட்டத்துக்கான வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டுக்கும் மத்திய அரசு நிர்ணயிக்கிறது. இந்நிலையில், ஜனவரி - மார்ச் காலாண்டுக்கு வட்டி விகிதம் 7.1% என தொடர்ந்து நீடிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜிபிஎஃப் மட்டுமல்லாமல் இன்னும் வேறு சில பென்சன் திட்டங்களுக்கும் 7.1% வட்டி பொருந்தும்.

கீழ்கண்ட பென்சன் திட்டங்களுக்கு ஜனவரி - மார்ச் காலாண்டில் 7.1% வட்டி வழங்கப்படும்

  • ஜிபிஎஃப் (General Provident Fund) (மத்திய சேவைகள்)
  • பங்களிப்பு பென்சன் நிதி (Contributory Provident Fund)
  • அகில இந்திய சேவைகள் வருங்கால வைப்புநிதி (All India Services Provident Fund)
  • அரசு ரயில்வே வருங்கால வைப்பு நிதி (State Railway Provident Fund)
  • ஜிபிஎஃப் (Defence Services) (பாதுகாப்பு படை சேவைகள்)
  • The Indian Ordnance Department Provident Fund
  • The Indian Ordnance Factories Workmen's Provident Fund
  • The Indian Naval Dockyard Workmen's Provident Fund
  • The Defence Services Officers Provident Fund
  • The Armed Forces Personnel Provident Fund

மேலும் படிக்க

சிறுவர் சேமிப்பு கணக்குத் திட்டத்தின் இத்தனை அம்சங்கள் உள்ளதா!

வீட்டுக் கடன் வட்டியை உயர்த்தியது ICICI வங்கி: வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி!

English Summary: Pension scheme for government employees: interest rate hike! Published on: 05 January 2023, 06:47 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.