Others

Wednesday, 23 February 2022 08:44 AM , by: Elavarse Sivakumar

திருவாரூர் மாவட்டத்தில் இயங்கும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள மக்கள் தொடர்பு அலுவலர், உதவி பதிவாளர், உள்ளிட்ட பல பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
எனவே இந்தப் பதவிகளுக்குத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பணியிடங்கள் நிரந்தர பணி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.03.2022க்குள் விண்ணப்பிக்க வேண்டியது கட்டாயம்.

மக்கள் தொடர்பு அலுவலர் (Public Relations Officer)

காலியிடங்கள் : 1

கல்வித் தகுதி (Educational Qualification)

முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 வருடப் பணி அனுபவம் அவசியம்.

வயது (Age Limit)

40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உதவி பதிவாளர் (Assistant Registrar)

காலியிடங்கள் : 1

கல்வித் தகுதி (Educational Qualification)

முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு (Age Limit)

40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பிரிவு அலுவலர் (Section Officer)

காலியிடங்கள்: 1

கல்வித் தகுதி (Educational Qualification)

இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3 வருடப் பணி அனுபவம் வேண்டும்.

வயது வரம்பு (Age Limit)

35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தனி உதவியாளர் (Personal Assistant)

காலியிடங்கள் : 2

கல்வித் தகுதி (Educational Qualification)

இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் வேண்டும். தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு (Age Limit)

  • 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • வயது வரம்பு தளர்வு; ஓபிசி பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும், எஸ், எஸ்டி பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை (Selection)

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை (How to apply)

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://cutnnt.samarth.edu.in/index.php/site/login என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி 

The Joint Registrar, Recruitment cell, Central University of Tamil Nadu, Neelakudi, Thiruvarur – 610 005, Tamil Nadu

காலக்கெடு(Deadline)

29.03.2022

மேலும் படிக்க...

வீடு கட்ட ரூ.2.67 லட்சம் மானியம்- பெறுவதற்கான வழிமுறைகள்!

இதைச் செய்யாவிட்டால் உங்கள் PAN Card முடக்கப்படும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)