Others

Friday, 08 July 2022 01:53 PM , by: Poonguzhali R

Work in Tamil Nadu Government Hostels!

தர்மபுரி மாவட்டத்தில் இருக்கின்ற அரசு விடுதிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எத்தனை காலி இடங்கள் உள்ளன? தகுதிகள் என்னென்ன? சம்பளம் எவ்வளவு? முதலான விரிவான தகவல்களை இப்பதிவு விளக்குகிறது.

தகுதிகள்

  • தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • வயது வரம்பு என்று பார்க்கும்போது 18 முதல் 34 உடையவராக இருக்க வேண்டும்.

செயல்முறை

  • விருப்பம் உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினைப் பூர்த்திச் செய்து கொடுத்தல் வேண்டும்.
  • விண்ணப்பத்தில் சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தைப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: TET/TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

பணிகளின் விவரம்

  • பணி: பகுதி நேரத் தூய்மைப் பணியாளர்
  • தொகுப்பூதியம்: ரூ. 3000
  • இந்த பகுதி நேரத் தூய்மைப் பணியாளர் காலிப்பணியிடங்கள் நேர்காணல் மூலமும், இன சுழற்சி மூலமும் நிரப்பப் பட இருக்கின்றது. எனவே, தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்ற விடுதிகளில் காலியாக இருக்கின்ற 4 பகுதி நேரத் தூய்மைப்பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக 12.05.2022 மற்றும் 13.05:2022 அன்று வெளியிடப்பட்ட பத்திரிக்கை செய்திகளின் அடிப்படையில் 11.07-2022 அன்று நடைபெற இருந்த நேர்காணல் ஆகியன தற்போது 2 பணியிடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வறிவிப்பு பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தின் அறிவுரையின் அடிப்படையில் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2 பகுதிநேர தூய்மைப்பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.

மேலும் படிக்க

KCC Update: கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு குவியும் சலுகைகள்!

பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை! ஆட்சியர் அறிவிப்பு!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)