இந்திய ராணுவ அக்னிவீர் கோயம்புத்தூர் பேரணி 2022, அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் ஆகிய பதவிகளில் சேருவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த அறிவிப்பு குறித்த விரிவான தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.
பணியில் சேர்வதற்கான தகுதிகள், வேலை விவரங்கள், பாடத்திட்டங்கள், குறிப்பு புத்தகங்கள், போலி தேர்வு இணைப்புகள் மற்றும் பதவி ஆகிய தொடர்பான தேர்வு முறைகள் அனைத்தும் இப்பதிவில் விரிவாகக் கொடுக்கப்படுகின்றன. இப்பதிவினைக் கொண்டு பயன்பெறுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிக்க: ஆடு வளர்ப்புக்கு ரூ. 4 லட்சம் தரும் மத்திய அரசின் திட்டம்!!
பணியிடங்கள்
- அக்னிவீர் (பொது கடமை)
- அக்னிவீர் (தொழில்நுட்பம்)
- அக்னிவீர் கிளார்க் / ஸ்டோர் கீப்பர் (தொழில்நுட்பம்)
- அக்னிவீர் டிரேட்ஸ்மேன் (10வது தேர்ச்சி)
- அக்னிவீர் டிரேட்ஸ்மேன் - 8வது தேர்ச்சி (சைஸ், ஹவுஸ் கீப்பர் & மெஸ் கீப்பர்) (அனைத்து ஆயுதங்களும்)
மேலும் படிக்க: 50% மானியம் வேண்டுமா? நாட்டுக்கோழி வளர்ப்புக்கு இன்றே பதிவு செய்யுங்கள்!
வயது வரம்பு
அரசாங்க விதிகளின் படி தளர்வுடன் கூடிய வயது வரம்பாக 18 முதல் 27 வயது வரை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
விண்ணப்பிக்கும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் மற்று நிறுவனங்களிலிருந்து 8, 10, 12, டிப்ளமா முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கட்டணம் ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறைகள்
- மருத்துவ பரிசோதனை
- பொது நுழைவுத் தேர்வு (CEE)
- பொது நுழைவுத் தேர்வில் எதிர்மறை மதிப்பெண்கள் உண்டு.
விண்ணப்பதாரர்கள் அதிகாரப் பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது. விண்ணப்பிக்கக் கடைசி தேதி 03.08.2022 எனத் தெரிவிக்கப்பட்டுள்ள்ளது. எனவே, விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்னப்பித்துப் பயன் பெறுங்கள்.
மேலும் படிக்க
புது அப்டேட்: ரேஷன் பொருட்கள் வாங்குவதில் புதிய விதி!
மக்களே உஷார்! சிலிண்டர் மானியம் கிடைக்கவில்லையா? உடனே இதை செய்யுங்க!