இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 27 December, 2024 5:15 PM IST
MFOI awardee Kalavathi

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண் விவசாயியான கலாவதி சமீபத்தில் கிரிஷி ஜாக்ரன் மற்றும் ICAR சார்பில் முன்னெடுக்கப்பட்ட மில்லினியர் விவசாயி விருதினை வென்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கலாவதி மேற்கொண்டு வரும் விவசாய பணிகளையும், எதிர்காலத் திட்டங்களையும் குறித்து தெரிந்துக் கொள்வதற்காக அவருடன் நேர்க்காணல் மேற்கொள்ளப்பட்டது. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-

கே: உங்களைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம் சொல்லுங்களேன்?

பதில்: “நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் தான். அடிப்படையிலேயே நான் ஒரு விவசாய குடும்பப் பின்னணியினை சார்ந்தவள். எனது கணவர் சுந்தர ராஜன் அவர்கள் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அவரது பெற்றோர்களும் வேளாண் சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் தான். எங்களைப் பொறுத்த வரைக்கும் விவசாயம் என்பது உயிர்நாடி. ஆரம்பத்தில் 200 தொட்டிகளை கொண்டு மாடித்தோட்டம் அமைத்து வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை சாகுபடி செய்து வந்தேன். அப்போது எல்லாம் மாடித் தோட்டம் அவ்வளவு பிரபலமில்லை.

என் ஆர்வத்தையும், செயல்பாடுகளையும் பார்த்த எனது கணவரும், அப்பாவும் தான்.. நிலம் ஒன்றினை எனக்காக வாங்கி முழுமையாக வேளாண் பணியில் நான் ஈடுபட உத்வேகம் அளித்தனர். அங்கத் தொடங்கிய பயணம், இன்று விருதுகள் வாங்கும் அளவிற்கு கொண்டு வந்துள்ளது” என புன்னகைத்தார்.

கே: உங்களுடைய நிலம் எங்க இருக்கு? என்ன மாதிரியான பயிர்கள் பயிரிட்டு இருக்கீங்க?

பதில்:  “சத்தியமங்கலம், குத்தியாலத்தூர், கடம்பூர் மலைப்பகுதியிலுள்ள பவளக்குட்டை என்கிற கிராமத்தில் தான் எங்களுக்கான நிலம் உள்ளது.  அது ரொம்பவே வறட்சியான பகுதி. மழைப்பொழிவு அதிகமாக எல்லாம் இருக்காது. அப்படிப்பட்ட பகுதியில் காபி, மிளகு உற்பத்தி பற்றியெல்லாம் யோசித்துக் கூட பார்க்க முடியாது.

ராகி,கம்பு, மக்காச்சோளம், குச்சி கிழங்கு போன்றவை தான் அப்பகுதியில் பெரும்பாலும் பயிரிடுவார்கள். தேக்கு மரம் வளர்ப்பில் எங்களுக்கு ஆரம்பம் முதலே ஆர்வம் இருந்தது. 10 ஏக்கர் பரப்பளவில் தேக்கு மரம் நட்டு பராமரித்து வருகிறோம். இந்த மரத்திலிருந்து வருமானம் பார்க்க கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாவது ஆகிவிடும். இதற்கு நடுவில் என்ன செய்யலாம் என யோசித்தப் போது தான், மிளகு நோக்கி நகரத் தொடங்கினோம்.

சொட்டு நீர் பாசன அமைப்பும் எங்களிடம் இருந்ததால், தொடக்கத்தில் 100 செடி வாங்கி மிளகு பயிரிடலாம்னு முடிவு எடுத்தோம். 6 மாத இடைவெளியில் மிளகு செடியின் வளர்ச்சி நன்றாகவே இருந்தது. அதனைத் தொடர்ந்து உடனே 10 ஏக்கருக்கும் மிளகு பயிரினை விரிவாக்கம் செய்து விட்டோம்.”

விஞ்ஞானிகளிடம் கிடைத்த பாராட்டு:

தேக்கில் மிளகு வளர்ப்பது சவாலான விஷயம். அதை சிறப்பாக செய்றீங்கனு ICAR- கோழிக்கோடு விஞ்ஞானிகள் பாராட்டினார்கள். எங்களை நேரடியாக அழைத்து, மிளகில் நாற்று பெருக்குவது தொடர்பான பயிற்சிகளையும் வழங்கினார்கள்."

அதனைத் தொடர்ந்து மிளகில் எந்த இரகம் நம்ம நிலத்தில் நல்ல மகசூல் தருகிறது என்பதனை தெரிந்துக் கொள்ள, எல்லா மிளகு இரகத்திலும் 100 செடி கொண்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சோம். அதில் பன்னியூர் 1 இரகம் தான் நல்ல ரிசல்ட் தந்தது. இப்போ 20 ஏக்கரில் மிளகு சாகுபடி மேற்கொள்கிறோம். இதற்கு இடையில் ஊடுபயிராக காபியும் பயிரிட்டு இருக்கிறோம்.  இதுப்போக தென்னை 10 ஏக்கர் ,அதுல 2000 பாக்கு , அப்புறம் கடந்த 5 வருடமாக 2 ஏக்கரில் டிராகன் பழ சாகுபடியிலும் ஈடுபட்டு இருக்கிறோம். நல்ல லாபகரமான முறையில் டிராகன் சாகுபடி போயிட்டு இருக்கு.

Read more: கலைஞர் கைவினை திட்டம்: மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி- விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியிலுள்ள வேளாண் அறிவியல் மையத்தின் (ICAR – KVK , MYRADA) முதன்மை விஞ்ஞானி அழகேசன் அவர்கள் நேரடியாக எங்களது நிலத்திற்கு வருகைத்தந்து, நாங்கள் மேற்கொண்டு வரும் மிளகு, டிராகன் பழ சாகுபடியையும், மழைநீர் சேமிப்பு திட்டங்களையும் கண்டு வெகுவாக பாராட்டினார்.”

“அதன் தொடர்ச்சியாக, வேளாண் அறிவியல் மையத்திற்கு எங்களை வரவழைத்து “ உயர்-தொழில் நுட்ப முறையில் தோட்டக்கலை சாகுபடியில் “ சிறப்பாக செயல்படுவதாக சான்றிதழ் அளித்தும் கௌரவப்படுத்தினார்கள். வேளாண் பணிக்காக நான் வாங்கிய முதல் விருது இது என்றே சொல்லலாம். கேவிகே அளித்த ஊக்கம், எங்களை மேலும் சிறப்பாக செயல்பட உத்வேகம் அளித்தது என்றால் மிகையல்ல” என்றார்.

கே: மிளகு, காபி, டிராகன் பழம்னு சாகுபடி செஞ்சிட்டு வாறீங்க.. எந்த பயிரில் என்ன மாதிரி வருமானம் கிடைக்குது?

பதில்:டிராகன் பழத்தில் தான் தற்போது எங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்குது. மிளகுல வருமானம் கிடைக்க 7 வருடம் ஆகும். 10 லட்சம் வரை தற்போது மிளகில் வருமானம் பார்த்துள்ளோம். காபியும் நீண்ட கால பயிர் என்பதால் இப்போது காய்க்க தொடங்கியுள்ளது. தென்னையினைப் பொறுத்தவரை காயாக விற்கும் போது வருமானம் குறைவாக கிடைக்கும். இளநீர் காயாக விற்கும் போது நல்ல வருமானம் கிடைக்கும்.

டிராகன் பழம் ஏப்ரல் மாதம் பூக்கத் தொடங்கினால் நவம்பர் இறுதி வரைக்கும் அறுவடை பார்க்கலாம். ஒரு பூ வந்துவிட்டால், அன்றிலிருந்து 21-வது நாள் நமக்கு பழம் கிடைத்துவிடும். 10 ஏக்கர் தென்னை மூலம் கிடைக்கும் வருமானத்தை விட, 7 மாதக்காலத்தில் டிராகன் பழத்தில் அதிக வருமானம் பார்த்துவிடலாம். ஆரம்பத்தில் முதலீட்டுச் செலவு அதிகமாக தான் இருக்கும். ஆனால் ஓராண்டுக்குப் பின் நல்ல வருமானத்தை டிராகன் பழத்தில் நம்மால் பார்க்க முடியும்”.

Dragon fruit cultivation

(நேர்க்காணலின் முழுத் தொகுப்பு ஜனவரி மாத கிரிஷி ஜாக்ரன் தமிழ் இதழில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.)

Read more:

சூர்யா அறக்கட்டளை முன்னெடுப்பில் இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம்!

நெல் விவசாயிகளுக்கான சி.நாராயணசாமி நாயுடு விருது: யாரெல்லாம் விண்ணப்பிக்கத் தகுதி?

English Summary: Erode women farmer Kalavathi make profit from Pepper Dragon Fruit Cultivation in Dry Areas
Published on: 27 December 2024, 05:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now