ஆத்தூர் கிச்சடி சம்பா, வெள்ளை பொன்னி, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, கருங்குருவை, அறுபதாம் குருவை போன்ற பல அரிசி ரகங்களை நாம் கேள்விப்பட்டு இருப்போம், ஆனால் இவைகளை நமது உணவு முறைகளில் சேர்த்துக் கொள்கிறோமா என்றால் அது கேள்விக்குறியே... ஆம் இவை நம் பாரம்பரிய நெல் ரகங்கள். கலப்பினம் இல்லாதது. மண்ணுக்கும் மனிதனுக்கும் ஏற்றது.
உங்கள் கிருஷ் ஜாக்ரன் தமிழ்நாடு இணையதள ஃபேஸ்புக் பக்கத்தின் மூலமாக நடைபெற்ற இன்றைய ''Farmer the Brand'' நிகழ்ச்சியில் செங்பல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயியும், பாரம்பரிய நெல் ரக விற்பனையாளருமான ''சாந்திகுமார்'' கலந்துகொண்டார். அப்போது, இயற்கை விவசாயம் குறித்தும், நாம் வழக்கத்திலிருந்து மறந்துவிட்ட நம் பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்தும் பல்வேறு தகல்களை நம் வாசகர்களோடு பகிர்ந்துகொண்டார். வீடியோவைக் காண ; https://www.facebook.com/krishijagrantamilnadu/videos/1631302613684847 இங்கே கிளிக் செய்யவும். அவர் பேசிய சில குறிப்புகள் உங்களுக்காக...
25 வகை பரம்பரிய அரிசி மற்றும் நெல் ரகங்கள்
பாசுமதி அரிசி, ஆத்தூர் கிச்சலி சம்பா , வெள்ளை பொன்னி , மாப்பிள்ளை சம்பா , கருப்பு கவுனி , சேலம் சன்னா, சொர்ணமசூரி, காளான் நமக், தூயமல்லி, தங்க சம்பா, கல்லுருண்டை சம்பா, மடுமுழிங்கி, வாசனை சீரக சம்பா, இலுப்பை பூ சம்பா, கருங்குருவை, அறுபதாம் குருவை பூங்கார் போன்ற 25 க்கும் மேற்பட்ட அரிசி மட்டும் நெல் ரகங்களை இயற்கை முறையில் கடந்த 9 ஆண்டுகளாக விவசாயம் செய்தும் அதனை லாபகரமான முறையில் சந்தைப்படுத்தியும் வருவதாக தெரிவித்தார்.
குறைந்த காலத்தில் அதிக விளைச்சல் தரும் ஒட்டு ரக அரிசி ரகங்களே தற்போது அதிகம் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையிலும் பரம்பரிய அரிசியின் நன்மைகள் குறித்து மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக தற்போது பாரம்பரிய அரிசி ரகங்களுக்கும் மவுசு அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார்.
அந்தந்த காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ப பாரம்பரிய அரிசி ரகங்களை சாகுபடி செய்வதன் மூலமும், நேரடியாக விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் என்றும் சாந்திகுமார் தெரிவித்தார்.
ஆரோக்கிய வாழ்விற்கு "யோகா" - இன்று சர்வதேச யோகா தினம்!!
மழைத்துளி இயற்கை விவசாய கூட்டமைப்பு
தற்போதைய காலகட்டத்தில்,அனைத்து வித பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புவதால், அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சுமார் 50க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் ''மழைத்துளி இயற்கை விவசாய கூட்டமைப்பு'' என்ற அமைப்பை உருவாக்கி தங்களின் விவசாய பொருட்களான விதை நெல் , அரிசி, எள்ளு, உளுந்து. துவரை போன்றவற்றை கூட்டு முயற்சியின் மூலம் விற்பனை செய்து வருவதாக குறிப்பிட்டார். இது போன்ற முயற்சியின் காரணமாக அனைத்து இயற்கை விவசாய பொருட்களும் ஒரே இடத்தில் கிடைப்பதன் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கும் என்றார்.
இயற்கை இடுப்பொருட்கள்
பஞ்சகவ்யம், ஜீவமிர்தம் , அமிர்த கரைசல் , மீன் அமிலம் , தேமோர்கரைசல் , கற்பூர கரைசல் , உயிர் உரங்கள் , தொழு உரங்கள் , புண்ணாக்கு வகைகள், மேம்படுத்தபட்ட அமிர்த கரைசல் உள்ளிட்ட முற்றிலும் இயற்கை இடுப்பொருட்களை கொண்டே விவசாயம் செய்து வருவதாக குறிப்பிட்ட சாந்தி குமார், இயற்கை முறையில் விவசாயம் செய்வதால் வரும் காலங்களில் நல்ல விளைச்சல் பெற முடியும் என்றார்.
Related link..
மலர் சாகுபடியில் அசத்தும் பட்டதாரி பாலசிவபிராசத்!
மக்களின் நம்பிக்கை
காலநிலை மாறுபாடுகளை அறிந்தும், மக்களின் தேவை அறிந்தும் சாகுபடி செய்வது, பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் மதிப்பு கூட்டு பொருளாக மாற்றுவது, தரமான பேக்கேஜிங் (Quality Packaging) மற்றும் இயற்கை இடுப்பொடுட்கள் போன்ற காரணங்களால் மக்கள் மத்தியில் தனது பரம்பரிய அரிசி மற்றும் நெல் ரகங்கள் மீது மிகுந்த நம்பிக்கை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இத்தனை விஷயங்களையும் முழுவதுமாக எப்போதும் கடைப்பிடித்தால் மட்டுமே அமோக வாடிக்கையாளர்களை பெற முடியும் என்றும் தெரிவித்தார்.
வருமான திட்டமிடல்
விவசாயிகள் கால்தடை வளர்ப்பில் அதிகம் கவணம் செலுத்தினால் அது இயற்கை விவசாயத்திற்கும், வருமானத்திற்கும் உதவும் என்றார். மேலும், தின வருமானம், வார வருமானம், மாத வருமானம் , ஆண்டு வருமானம் என திட்டமிட்டு அதற்கு எற்ற வகையில் பயிர் சாகுபடிகளை மேற்கொள்வதன் மூலம் விவசாயிகள் லாபத்தினை பெருக்க முடியும் என்றும் சாந்திகுமார் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
மானிய விலையில் காய்கறி விதைகள் - தோட்டக்கலை துறை!
பதநீரைக் குளிர்பானமாக மாற்ற புதிய திட்டம்