Success stories

Sunday, 23 August 2020 02:30 PM , by: Elavarse Sivakumar

மனிதனுக்கு இதயம் போல், மரத்திற்கு வேர்கள் இன்றியமையாதவை. அத்தகைய வேர்களைத் தாக்கி அழிக்கும், கண்ணுக்கு தெரியாத நூற்புழுக்களைத் துவம்சம் செய்கிறது, ஸ்ரீ வாரி ஆர்கானிக்ஸின் நெமோலிப் (Nemolip) என்னும் இயற்கை நூற்புழுக்கொல்லி.

ஸ்ரீ வாரி ஆர்கானிக்ஸ் (Sri vaari organic)

ஈரோடு மாவட்டம் பூதப்பாடியைச் சேர்ந்த ஸ்ரீ வாரி ஆர்கானிக்ஸின் இந்த நூற்புழுக்கொல்லி குறித்து அதன் உரிமையாளர் நந்தகுமார், கிருஷி ஜாக்ரன் தமிழ்நாடு இணையதள ஃபேஸ்புக் பக்கத்தின் மூலமாக நடைபெற்ற ''Farmer the Brand'' நேரலை நிகழ்ச்சியில் பேசினார்.

மென்மையான வேர்களைக் குறிவைத்துத் தாக்கி அழிக்கும் நூற்புழுக்கள், மரம், செடி, கொடி, என அனைத்து வகைத் தாவரங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக நன்னீர், மழை நீர், கடல் நீர் மற்றும் சமவெள்ளி பகுதி, மலைப்பிரதேசங்களில் அதிகளவில் வளரும் நூற்புழுக்களால் 70 சதவீதம் வரை மகசூல் பாதிக்கப்படுகிறது. 

ஆர்கானிக்ஸ் நெமோலிப்

பூசணங்கள்,பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்றவற்றை வேர்கள் வழியாகக் கொண்டு சென்று, பயிர் வளர்ச்சியை பாதிக்கும் நூற்புழுக்களை அழிக்கும் நெமோலிப் மூலிகை தாவரங்களை கொண்டு தயாரிக்கப்படுவதால் இதனைப் பயன்படுத்துவதால் பயிர்கள், மனிதர்கள், விலங்குகள் என யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாது.

இதனை ஏக்கருக்கு 400 மில்லி கிராம் வீதம், 60 நாட்களுக்கு ஒருமுறை, சொட்டு நீர் பாசனம், வரப்பு பாசனம் என எந்த முறையிலும் பயன்படுத்தலாம். பயன்படுத்துவதற்கு 10 நாட்களுக்கு முன்பும், பயன்படுத்திய 10 நாட்கள் வரையும் வேறு எந்த உரங்களையும் பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

நெமோலிப் பயன்பாடு 

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் சான்றிதழைப் பெற்ற எங்கள் தயாரிப்பு,
மஞ்சள், வாழை, தக்காளி, கத்திரிக்காய், மிளகாய், தர்பூசணி போன்றவற்றில் நல்ல மகசூலைத் தந்திருக்கிறது.

இதனைப் பயன்படுத்துவதால், பழங்களின் எடை, மணம், நிறம் உள்ளிட்டவை அதிகரிப்பதோடு, கூடுதல் மகசூலும் கிடைக்கும். மேலும் பூக்களில், அவை வழக்கமாக வாடும் நேரத்தைவிட, கூடுதலாக வாடாமல் பொலிவோடு இருக்கும்.

மா மரங்களைப் பொருத்தவரை, எங்கள் தயாரிப்பைப் பயன்படுத்தினால், காய் உருவத்தில் பெரிதாவதோடு, எடையும், மகசூலும் அதிகரிக்கும். பூங்காத மரங்கள் பூக்கும்..

இதேபோல், தாவரங்களுக்கு ஊட்டச்சத்து அளித்து வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஃபெர்டிலிபையும் (Fertilip), க்ரஷ் (Cresh) என்னும் பூசணக்கொல்லியையும் விற்பனை செய்கிறோம்.

எங்கள் தயாரிப்புகளை நேரடியாக மட்டுமே விற்பனை செய்வதால், விருப்பம் உள்ளவர்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு நந்தகுமார் தெரிவித்தார். 

மேலும் படிக்க...

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் RNR ரக அரிசி- ஏரோ ஃபுட் நிறுவனத்தின் சிறப்புத் தயாரிப்பு!

ஆன்லைன் காளான் வளர்ப்பு பயிற்சி- தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஏற்பாடு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)