2012-ல் நாட்டின் காலணி வணிகத்தில் தனது சொந்த தடத்தை நிறுவ முடிவு செய்தபோது, அவர் கோயம்புத்தூரைத் தளமாகத் தேர்ந்தெடுத்தார். ஆனால் கடைசி நிமிட தடுமாற்றம் அவரை ஆந்திர பிரதேசத்தில் உள்ள சூலூர்பேட்டா அருகே தனது முதல் ஆலையை வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரு வருடத்திற்குள் கோயம்புத்தூரில் தனது நிறுவனத்தின் இரண்டாவது ஆலையை நிறுவினார். அவர் யார்? என்ன சாதித்தார் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
வாக்காரூ (Walkaroo) இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான வி.கே.சி.நௌஷாந்த் குறித்து இப்பதிவில் பார்க்கலாம். இவர் வாக்கரூ (Walkaroo) தென்னிந்தியாவின் மிகப்பெரிய காலணி பிராண்டாகும். இந்தியாவின் மூன்றாவது பெரிய மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய PU (பாலியூரிதீன்) காலணி பிராண்டாகும். நாடு முழுவதும் 12 ஆலைகளும், கோவையில் மட்டும் மூன்று ஆலைகளும் உள்ளன.
அவரது காலணி தடத்தைக் குறித்து நௌஷாத் கூறியது வருமாறு, அவர் இதை ஒரு கதை போலவே கூறியுள்ளார்.
சந்தை அப்போது ஹவாய் செப்பல்களால் நிரம்பியிருந்தது. பின்னர் PVC.PU மாற்றாக வெளிப்பட்டது. நான் தாமதமாகத் தொடங்கினேன், இந்திய தோல் அல்லாத காலணி சந்தையில் தனது தசாப்தக் காலப் பயணத்தை நௌஷாத் நினைவு கூறியிருக்கிறார். ஃபேஷனை ஜனநாயகப்படுத்த முடிவு செய்தோம். மலிவு விலையில் வெரைட்டி என்பது எங்கள் குறிக்கோள். PU தயாரிப்புகள் குறைந்த எடை மற்றும் வசதியானவை என்பதால், உடனடியாகச் சந்தை ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், ஆரம்ப இலக்காக இளைஞர்கள் இருந்தபோதிலும், ஒரு குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் விரைவில் தயாரிப்புகளைச் சேர்த்துள்ளோம் என்கிறார்.
உலக சந்தைக்கான பிரீமியம் தயாரிப்புகளைத் தயாரிப்பதற்குத் தைவான் நிறுவனங்களுடன் கைகோர்க்க அவர் தயாராக இருக்கும் அதே வேளையில், வால்காரூ ஐரோப்பியச் சந்தையைத் தானே கேட்டு நடத்த முடியும் என நௌஷாத் நம்பிக்கை தெரிவித்தார். இதற்காக, நிறுவனம் இப்போது புதிய தயாரிப்புகளை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க