வெற்றிகரமாக திகழ வேண்டும் என்பது புவியில் உள்ள நம் அனைவரின் விருப்பமாக இருக்கிறது. குழந்தையோ, பெரியவரோ வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், வெற்றி பெற வேண்டும் எனும் உள்ளார்ந்த விருப்பமே, நம்மை மகத்தான வெற்றியை நோக்கி முன்னேற வைக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிலையங்கள், அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும், ஒருவருக்கு ஒருவர் போட்டியிடுவதை, நாம் அனைவரும் நாள்தோறும் பார்த்து வருகிறோம். அதில் வெற்றி, தோல்வி என தினமும் நாம் சந்திக்கும், ஒரு விஷயமாகும். அவ்வாறு வெற்றி கிடைக்காவிட்டால், நாம் ஏமாற்றம் அடைந்து, தாழ்வு மனப்பான்மை கொள்கிறோம், அல்லவா?. சீரான, ஈடுபாடு மிக்க முயற்சிகள் அலட்சியம் செய்யப்பட்டு, தோல்வி மட்டுமே ஊக்குவிப்பட்ட மனிதர்கள் மத்தியில், இந்த நிலையைக் கண்டிருப்பீர்கள்.
உலகில் இதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன, மேலும் நாள்தோறும் நம்மை யாராவது ஒருத்தர், அவர்களின் செயலால் நம்மை ஊக்குவிக்கின்றனர். பெரும்பாலான ஜாம்பவான்கள் கூட வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் சோதனைகளை எதிர்கொண்டுள்ளனர். அதில் சிலவற்றை இந்த பதிவில் காணலாம்.
ஸ்டீவ் ஜாப்ஸ்: (Steve Jobes)
ஆப்பிளை போன்ற பெரிய நிறுவனத்தை உருவாக்கிய ஜாம்பவனாக ஸ்டீவ் ஜாப்ஸ் கருதப்படுகிறார், என்பது குறிப்பிடதக்கது. இருப்பினும், 2 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட நிறுவனம் ஒரு கேரேஜில் 2 பேரால் துவக்கப்பட்டது என்பது சற்று வியப்பளிக்கலாம். அது மட்டும் அல்ல, இந்த மகத்தான நிறுவனர், தான் துவக்கிய நிறுவனத்தில் இருந்தும், அதன் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார், என்பது நம்மில் பலர் அறியாத உண்மையாகும். எனினும் ஜாப்ஸ் தனது திறமையை உணர்ந்து, ஆப்பிளை மகத்தான நிறுவனமாக உருவாக்கியுள்ளார், இதை யாராலும் மறுக்க முடியாது.
பில் கேட்ஸ்: (Bill Gates)
பில்கேட்ஸ், இந்த பெயரை கேள்விப்பாடாத நபர்களே இருக்க வாய்ப்பில்லை. பில்கேட்ஸ், பொருத்தவரை வெற்றியின் கொண்டாட்டத்தைவிட, தோல்வியின் பாடங்களுக்கு செவி சாய்ப்பது முக்கியமாக கருதுபவர். மைக்ரோசாப்ட் எனும் மகத்தான நிறுவனத்தை துவக்கியவர், ஹார்வர்டு கல்வி நிலையத்தில் தனது படிப்பை பூர்த்தி செய்யாதவர் என்பது குறிப்பிடதக்கது. மேலும் அவர் சொந்தமாக துவக்கிய Traf-O-Data பெரும் தோல்வியாக அமைந்தது, என்பது நம்மில் பலருக்கு தெரியாத உண்மையாகும். அவரது கல்வியும் பாழாகியது. ஆனால், கம்ப்யூட்டர் புரோகிராமில் இருந்த ஆர்வம் காரணமாக, அவர் தொடர்ந்து முயன்று மைக்ரோசாப்ட் எனும் மகத்தான நிறுவனத்தை உருவாக்கியது, நம் அனைவரின் கண் முன்னே இருக்கும் உண்மையாகும்.
மேலும் படிக்க: TNPSC: தேர்வுகளில் பயோமெட்ரிக் அறிமுகம், எப்போது?
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்: (Albert Einstein)
அறிவியல் துறையில் மகத்தான கண்டுபிடிப்புகளுக்காக உலகம் முழுவதும் அறியப்படும் மேதையாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விளங்குவது, நாம் அனைவரும் அறிந்த உண்மையாகும். வெற்றி என்பது தோல்வியின் முன்னேற்றம் என்றும், தோல்வி அடையாத யாரும் உண்மையில் வெற்றி பெற்ற மனிதராக முடியாது என்றும் அவர் கூறுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுவயதில் அவர் பல தோல்விகளை சந்தித்திருக்கிறாராம், ஒன்பது வயது வரை அவரால் சரளமாக பேச கூட முடியவில்லை. ஜூரிச் பாலிடெக்னிக் கல்லூரியில் அவரது விண்ணப்பமும் பரிசீலிக்கப்படவில்லையாம். ஆனால், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகில் தனது திறமையை நிருபித்து, 1921ல் இயற்பியல் துறையில் நோபல் பரிசு வென்றார் என்று சொன்னால், அது மிகையாகது.
மேலும் படிக்க: அசைவ உணவுப் பிரியர் எண்ணிக்கையில் முதலிடம் வகிப்பது- ஆண்கள்
நம்மில் பலர் தினமும் ஒரு தோல்வியை சந்திக்கின்றோம், அதே நேரம் பலர் வெற்றியை சுவைக்கின்றனர். அதற்காக, தோல்வியடைந்தவர்கள், துவண்டிட கூடாது, அதே நேரம் வெற்றிபெற்றவர்கள் போதும் என எண்ணக்கூடாது. எனென்றால், இது இரண்டுமே நிலையானது அல்ல.
மேலும் படிக்க:
State Bank: 2வது முறையாக உயர்ந்த வட்டி விகிதம்! விவரம் உள்ளே!