
செயற்கை நுண்ணறிவு தாக்கம் அனைத்து துறைகளிலும் கோலோச்ச துவங்கியுள்ள நிலையில், இந்தியாவில் விவசாயத்துறையில் செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தும் விதம் குறித்த கேள்விக்கு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் ராம்நாத் தாக்கூர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
கிசான் இ-மித்ரா (Kisan e-Mitra) எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான சாட்பாட், விவசாயிகளுக்கான சிறந்த தீர்வுகளை விரைவில் வழங்குகிறது. இது விவசாயிகளை தொழில்நுட்ப உதவியுடன் இணைக்கும் ஒரு செயல்பாட்டு கருவியாக செயல்படுகிறது.
பிராந்திய மொழிகளில் விரிவான சேவை:
விவசாய உலகில் புதிய தகவல் தொழில்நுட்பங்களை உட்புகுத்தலிலுள்ள குறைபாட்டை முறியடிக்கும் வகையில் கிசான் இ-மித்ரா முயற்சியை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அறிமுகப்படுத்தியது. இந்த சாட்பாட் விவசாயிகளின் கேள்விகளுக்கு அவர்களின் சொந்த மொழியில் உடனடி பதில்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 11 பிராந்திய மொழிகளில், அதாவது தமிழ், இந்தி, ஆங்கிலம், மலையாளம், கன்னடம், பெங்காலி, தெலுங்கு, மராத்தி, ஒடியா, பஞ்சாபி மற்றும் குஜராத்தியில் தற்போது இச்சேவை வழங்கப்படுகிறது. விரைவில் டோக்ரி மற்றும் காஷ்மீரி போன்ற மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
கிசான் இ-மித்ரா பயன்பாடு:
- பிஎம்-கிசான் திட்டம் (PM-Kisan): விவசாயிகளின் நிதி உதவிக்கான விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.
- விவசாய திட்டங்கள்: பயிர் காப்பீடு (PMFBY), கிசான் கிரெடிட் கார்டு (KCC) போன்ற பல திட்டங்களின் தகவல்கள் மற்றும் விண்ணப்ப செயல்முறைகள்.
- தனிப்பயன் ஆலோசனைகள்: மண் தரம், காலநிலை, மற்றும் பருவத்தை அடிப்படையாகக் கொண்டு பயிர் பரிந்துரைகள்.
- விவசாய வழிகாட்டுதல்கள்: பூச்சி மேலாண்மை, சந்தை விலை, மற்றும் பாசன முறைகள்.
நாடாளுமன்றத்தில், 2025 பிப்ரவரி 4 ஆம் தேதி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இராஜ்ய மந்திரி ராம்நாத் தாக்கூர் இந்த சாட்பாட் குறித்து எழுத்து மூலம் பதிலளித்துள்ளார். அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-
“கிசான் இ-மித்ரா விவசாயிகளின் வாழ்க்கையை எளிதாக்கும் ஒரு முன்முயற்சி. விவசாயிகள் எளிமையாகப் பயன்படுத்தக்கூடியதாகவும், பல்வேறு திட்டங்கள் மற்றும் உதவிகளை நேரடியாக அணுகும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் விளைபொருட்கள் இழப்பைச் சமாளிக்க, தேசிய பூச்சி கண்காணிப்பு அமைப்பு, பயிர் பிரச்சினைகளில் பூச்சித் தாக்குதலைக் கண்டறிய AI மற்றும் இயந்திர கற்றலைப் பயன்படுத்துகிறது."
"நெல் மற்றும் கோதுமை பயிர்களுக்கான செயற்கைக்கோள், வானிலை மற்றும் மண் ஈரப்பத தரவுத்தொகுப்புகளைப் பயன்படுத்தி பயிர் சுகாதார மதிப்பீட்டிற்கான கள புகைப்படங்களைப் பயன்படுத்தி AI அடிப்படையிலான பகுப்பாய்வு மற்றும் பயிர் சுகாதார கண்காணிப்பு மேற்கொள்ள உதவுகிறது” என்று அவர் தெரிவித்தார்.
கிசான் இ-மித்ரா விவசாயிகளுக்கு நேரம் மற்றும் செலவுகளை மிச்சப்படுத்தி, விவசாயத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியை உறுதிசெய்கிறது. இது விவசாய வளர்ச்சிக்கான முக்கிய அடித்தளமாக விளங்குகிறது. இது விவசாயிகளுக்கு நேரடி தகவலை வழங்குவதால், மத்தியஸ்தர்களின் மீதான தாங்கள் ஏற்படும் சார்பை குறைக்கிறது. விவசாயிகளுக்கு பயனுள்ள தீர்வுகளை தருவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு திட்டங்களைப் பற்றிய முழுமையான விளக்கத்தையும் வழங்குகிறது.
Read more:
ரூ.35.30 கோடி ஈவுத்தொகை: வளர்ச்சிப் பாதையில் தேசிய விதைகள் கழகம்
வேளாண் தொழில் முனைவோருக்கு குட் நியூஸ்- StartupTN உடன் COXBIT புரிந்துணர்வு ஒப்பந்தம்
Share your comments