Animal Husbandry

Thursday, 19 November 2020 11:44 AM , by: Elavarse Sivakumar

Credit : Live 15 Daily

அரசு மானியம் பெற்று நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில் ஈடுபட விரும்புவோருக்கு 5 நாள் பயிற்சி அளிக்கப்படும் என ஈரோடு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

  • தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 2020-21ம் ஆண்டில் நாட்டுக்கோழி வளர்ப்பு மூலம் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

  • இத்திட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு அதிகபட்சமாக 3 பயனாளிகள் வீதம் முன் அனுபவம் அல்லது ஆர்வம் உடைய 35 விவசாயிகள் முதற்கட்டமாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு 50 சதவீத மானியமாக கோழிக்குஞ்சுகள் கொள்முதலுக்கு ரூ.15,000, தீவனம் கொள்முதலுக்கு ரூ.22,500, அடைகாக்கும் கருவி கொள் முதலுக்காக அதிகபட்சமாக ரூ.37,500 என மொத்தம் என ரூ.75,000 வழங்கப்படும்.

நிபந்தனைகள் (Conditions)

  • இத்திட்டத்தில் கிராம ஊராட்சியில் நிரந்தரமாக குடியிருப்போர் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.

  • மேலும், ஆயிரம் கோழிகள் வளர்க்கக் கூடிய 2.500 சதுர அடி பரப்பளவு கொண்ட பண்ணைக் கொட்டகை அமைப்பு சொந்தமாக வைத்திருக்க வேண்டும்.

  • கோழி வளர்ப்புக்குத் தேவையான தீவனத் தட்டுகள், தண்ணீர்த் தட்டுகளை பயனாளியே கொள்முதல் செய்ய வேண்டும்.

Credit : Vikatan

முன்னுரிமை (Priority)

  • விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

  • 30 சதவீத பயனாளிகளாக ஆதி திராவிடர், பழங்குடியினர் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • பயனாளிகள் ஏற்கெனவே தமிழக அரசின் விலையில்லா கோழிகள் வழங்கும் திட்டம், கோழிப் பண்ணை அமைக்கும் திட்டம் ஆகியவற்றில் பயனடையாதவர்களாக இருக்க வேண்டும்.

  • தேர்வு செய்யப்படும் பயனாளிகள் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

பயிற்சி (Training)

  • முதல்கட்டமாக 3 நாள்கள் அடிப்படை கோழி வளர்ப்பு, தீவன மேலாண்மை, தடுப்பூசி போடுதல் போன்ற பயிற்சிகளும், அடைகாக்கும் கருவி கொள்முதல் செய்யப்படும் போது 2 நாள்கள் குஞ்சு பொறிப்பு குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.

  • தகுதியான, ஆர்வமுள்ள விவசாயிகள் அருகிலுள்ள கால் நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க...

எப்போது மின்னல் தாக்கும்?- தெரிந்துகொள்ள Damini-App

இவர்கள் மரவள்ளிக்கிழங்கை சாப்பிடக்கூடாது - ஏன் தெரியுமா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)