1. வாழ்வும் நலமும்

இவர்கள் மரவள்ளிக்கிழங்கை சாப்பிடக்கூடாது - ஏன் தெரியுமா?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Why shouldn't they eat cassava?

Credit : Gardening

குளிர்காலத்திற்கு ஏற்ற சிற்றுண்டிகளில் ஒன்று மரவள்ளிக் கிழங்கு. நம்மில் பலரும் பள்ளிப்பருவத்தில், இந்த கிழங்கை அதிகளவில் வாங்கி உண்டிருப்பர். அந்தக் காலத்தில் காஃபி வித் மரவள்ளி (Cofee with maravalli) என்றும் சொல்வதுண்டு.

மருத்துவப் பயன்கள் (Benefits)

 • மரவள்ளிக்கிழங்கில் உள்ள இரும்பு, தாமிரம் ரத்த சோகையை கட்டுப்படுத்தும்.

 • அதிக நார்சத்து இருப்பதால் எளிதில் சீரணமாக உதவும்.

 • இதில் இடம்பெற்றுள்ள புரத சத்தும், வைட்டமின் கேவும், எலும்பு மற்றும் திசுக்கள் ஆரோக்கியத்திற்கு அடித்தளம் அமைத்துக்கொடுக்கிறது.

 • இதிலிருந்து தயாரிக்கப்படும் முக்கிய மாவுப் பொருள் ஜவ்வரிசி. இது கஞ்சி, பாயசம் செய்ய உதவும்.

 • இக்கஞ்சி வயிற்று புண் ஆறுவதற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

 • இக்கிழங்கிலிருந்து சிப்ஸ் (Chips), முறுக்குகள் செய்து கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர போன்ற பகுதிகளில் விற்கப்படுகிறது.

 • மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்டார்ச் எனப்படும் மாவுப் பொருள் பல்வேறு துறைகளில், குறிப்பாக பருத்தி மற்றும் சணல் ஆடைகள் உற்பத்தி, காகிதம், நாட்காட்டி தயாரிப்பு, கோந்து மற்றும் கெட்டியான அட்டைகள் தயாரிக்கும் தொழிலில் முக்கியமான மூலப்பொருளாக பயன்படுகிறது.

 • ஜவுளி தொழிலில் துணிகளுக்கு கஞ்சி போட்டு மொடமொடப்பான தன்மை ஏற்படுத்த பயன்படுகிறது.

 • மரவள்ளி ஸ்டார்சிலிருந்து நேரடியாக "பயோ-எத்தனால்" என்ற எரிபொருள் உற்பத்தி செய்ய முடியும். பெட்ரோல் மற்றும் டீசல் மாற்றாக உற்பத்தி செய்து காற்று மாசை குறைத்து புவி வெப்பமடைவதை தவிர்க்கலாம்.

Credit : SBS

தீமைகள் (Disadvantages)

 • மரவள்ளிக்கிழங்கிலும் சர்க்கரை சத்து அதிகமாகவே இருக்கிறது. ஆனால் சர்க்கரைவள்ளிக் கிழங்கை விட கொஞ்சம் குறைவு தான்.

 • இதனை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால், அவர்களின் ரத்ததத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். எனவே சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. 

 • இதில் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து சாப்பிடுவார்கள். அதேபோல இந்த கிழங்கில் சிப்ஸ் போட்டும் உண்பார்கள். இந்த கிழங்கு மலச்சிக்கலையும், வாயுத்தொல்லையையும் ஏற்படுத்தும்.

தகவல்
அக்ரி சு சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை

மேலும் படிக்க....

எப்போது மின்னல் தாக்கும்?- தெரிந்துகொள்ள Damini-App

கூடுதல் மகசூலுக்கு பறவைகளும் முக்கியமே !

பயிருக்கு உயிரூட்டும் தயிர்- பொன்னியமாக மாற்றி யூரியாவிற்கு பதிலாக பயன்படுத்தலாம்!

English Summary: Why shouldn't they eat cassava?

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.