மதுரை, திருப்பரங்குன்றம் தியாராஜர் பொறியற்கல்லூரி சாலையில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் 50% மானியத்தில் ஆடு வளர்ப்பு பண்ணை அமைக்க ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கான பல்கலைக்கழக சான்றிதழுடன் கூடிய ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் வரும் செப்டம்பர் 27, 2023 அன்று நடைபெற உள்ளது.
முதலீடு, மானியம் மற்றும் வங்கி கடனுதவி விபரம்
ஆடுகளின் எண்ணிக்கை | தேவைப்படும் இடம் | உங்கள் முதலீடு | மானியம் | வங்கி கடனுதவி |
100 | 1 ஏக்கர் | 2.5 லட்சம் | 10 லட்சம் | 10 லட்சம் |
200 | 2 ஏக்கர் | 5 லட்சம் | 20 லட்சம் | 20 லட்சம் |
300 | 3 ஏக்கர் | 7.5 லட்சம் | 30 லட்சம் | 30 லட்சம் |
400 | 4 ஏக்கர் | 10 லட்சம் | 40 லட்சம் | 40 லட்சம் |
500 | 5 ஏக்கர் | 12.5 லட்சம் | 50 லட்சம் | 50 லட்சம் |
வங்கிக் கடனுதவியை மட்டும் 5 (ஐந்து) ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும்.
பயிற்சியின் சிறப்பம்சங்கள்
1. nlm.udayamimitra.in - ன் விளக்கம்
2. தயார் செய்ய வேண்டிய படிவங்கள் மற்றும் புகைப்படங்கள்
3. பண்ணை அமைக்க உள்ள நிலத்தைப் பற்றிய விளக்கம்
மேலும் படிக்க: புதிதாக மின் மோட்டர் பம்ப்செட் வாங்க யாரை அணுக வேண்டும்?
4. விண்ணப்பிக்கும் முறை அதன்பின் தொடரும் வழிமுறைகள்
5. வங்கியை அணுகி கடனுதவி பெறுவதற்கான வழி முறைகளும், உதவிகளும்
6. பண்ணை அமைக்க உள்ள இடத்தை பார்வையிட்டு பண்ணை அமைக்க உதவி செய்தல்
7. பண்ணை வீடு விளக்கம்
8. ஆடுகளை தேர்வு செய்தல், வளர்ப்பு முறைகள், தீவனம், இனப்பெருக்கம் மற்றும் நோய் தடுப்பு மேலாண்மைகள்
9. குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசி முறைகள்
10. ஆடு விற்பனை
11. மானியம் மற்றும் வங்கிக் கடனுதவி பெறுவதற்கான திட்ட அறிக்கைகள் வழங்குதல்
பயிற்சியின் முடிவில்
- ஆடு வளர்ப்பு - புத்தகம்
- அரசு சான்றிதழ்
- விபரங்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் மைய அலுவலகம் : 0452 - 2483903
- தொடர்புகொள்ளும் நாட்கள் : திங்கள் முதல் வெள்ளி
குறிப்பு: அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர் அனைவரும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம் - முன்பதிவு மிக அவசியம்
மேலும் படிக்க:
164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் Spot Admission அறிவிப்பு!
2ஆம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு அறிவிப்பு!