நாடு முழுதும் கால்நடைகளை தோல் கழலை நோய் தாக்கியதில், இதுவரையிலும் 57 ஆயிரம் மாடுகள் உயிரிழந்துள்ளன. இதையடுத்து, கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என, மத்திய அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தோல் கழலை நோய் (Skin disease)
மத்திய கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா கூறியதாவது:ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு வைரஸ் தொற்றால் தோல் கழலை நோய் ஏற்படுகிறது. இது பாதித்த கால்நடைகளின் தோலில் தடிப்புகள் உருவாகி, மிகவும் அவதிப்பட்டு உயிரிழக்கின்றன. அசுத்தமான உணவு, நீர் ஆகியவற்றை அருந்துவதால் கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் ஏற்படுகிறது.
நாடு முழுதும் இதுவரை 57 ஆயிரம் மாடுகள் தோல் கழலை நோயால் உயிரிழந்துள்ளன. எனவே, ஆடு, மாடு ஆகியவற்றுக்கு கழலை நோய் தடுப்பூசி செலுத்துவதில் மாநில அரசுகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க
வாட்ஸ்அப்பில் புலிக்குட்டி விற்பனை: வனத்துறை அதிரடி நடவடிக்கை!
ஆம்புலன்ஸ்களுக்கு ஜி.பி.எஸ். வசதி: காவல் துறையின் புதிய திட்டம்!