1. செய்திகள்

வாட்ஸ்அப்பில் புலிக்குட்டி விற்பனை: வனத்துறை அதிரடி நடவடிக்கை!

R. Balakrishnan
R. Balakrishnan
Tiger cubs

வாட்ஸ்ஆப் மூலம் ரூ.25 லட்சத்துக்கு புலிக் குட்டி விற்பனை செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். திருப்பதியில் சட்டம் பயிலும் இவர், வேலூர் மாநகருக்குட்பட்ட சார்ப்பனாமேடு பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பார்த்திபன் தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டசில் புலிக் குட்டி விற்பனை உள்ளத்தென்றும், விலை ரூ.25 லட்சம் என்றும், முற்றிலும் இது உண்மையான தகவல் என தெரிவித்துள்ளார்.

புலிக்குட்டி விற்பனை (Tiger Cubs Sales)

இதனை கண்காணித்த சென்னையை சேர்ந்த தலைமை வனத்துறையினர் இது குறித்து வேலூர் மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேலூர் வன அலுவலர் ரவிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சார்பனமேடு பகுதியில் வசித்து வந்த பார்திபனை 1972 வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில், சென்னை அம்பத்தூரை சேர்ந்த தமிழ் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, சென்னை வனத்துறையினர் தமிழ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூரில் கைதான பார்த்திபன், இதில் இடைத்தரகராக செயல்பட்டவர் என்றும், சென்னையை சேர்ந்த தமிழ் முக்கிய புள்ளியாக செயல்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.

மேலும் இவர்கள் இருவருக்கும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சென்னை மற்றும் வேலூர் வனத்துறையினர் தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க

10 ரூபாய் நாணயத்தில் பைக்: வைரலாகும் இளைஞரின் செயல்!

அச்சுப் பிழையுடன் 50 ரூபாய் நோட்டு: வங்கி அதிகாரி விளக்கம்!

English Summary: Sale of tiger cubs on WhatsApp: Forest department action! Published on: 08 September 2022, 07:57 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.