மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 August, 2022 8:33 AM IST

நாளுக்கு நாள், பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், அதற்கு மாற்றாக பிற எரிபொருட்களைக் பயன்படுத்துவது குறித்து அரசுகள் பரிசீலித்து வருகின்றன.

இந்நிலையில், மாட்டுச் சாணத்தில் இருந்து வாகன எரிபொருள் தயாரிக்க ராஜஸ்தான் அரசு முன்வந்துள்ளது.

100 டன் மாட்டு சாணம்

இந்த திட்டத்தின்படி, எரிவாயு தயாரிப்புக்கு தினசரி 100 டன் மாட்டு சாணம் பயன்படுத்தப்படும். இந்த திட்டம் ஓராண்டு காலத்திற்குள் செயல்பாட்டுக்கு வரும்.

பூமி பூஜை

பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக, காற்று மாசு இல்லா பசுமை எரிபொருள் தயாரிப்பு திட்டங்களை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இந்நிலையில், மாட்டு சாணத்தைக் கொண்டு உயிரி வாயு தயாரிக்கும் திட்டத்தை இந்துஸ்தான் பெட்ரோலிய கழக நிறுவனமான ஹெச்.பி.சி.எல். ராஜஸ்தான் மாநிலம் சஞ்சோரில் தொடங்கியுள்ளது.

இந்தத் திட்டத்திற்கான பூமி பூஜை, ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் பத்மேடா கிராமத்தில் நடைபெற்றது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பசுமை எரிசக்தியை பயன்படுத்தும் நோக்கத்துடன், இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது. கழிவிலிருந்து மின்சாரம் என்ற திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ஹெச்பிசிஎல்-ன் முதல் திட்டம் இதுவாகும்.

உயிரி எரிவாயு தயாரிக்க இந்த நிலையத்தில் தினசரி 100 டன் மாட்டு சாணம் பயன்படுத்தப்படும். இதிலிருந்து தயாரிக்கப்படும் எரிபொருளை வாகனங்களுக்கு பயன்படுத்தலாம். இத்திட்டம் ஓராண்டு காலத்திற்குள் செயல்பாட்டுக்கு வரும். கிராமப்புற தூய்மை இந்தியா திட்டத்தின் படியும், மத்திய அரசு தொடங்கியுள்ள கோபர்தன் திட்டத்தின் கீழும், இந்தத் உயிரி வாயு தயாரிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

தமிழக இளைஞர்களுக்கு வேலை- சென்னையில் சிறப்பு முகாம்!

வெறும் 750 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைக்கும்!

English Summary: A project to make vehicle fuel from cow dung!
Published on: 25 August 2022, 08:31 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now