வேலூரில் காலியாக உள்ள 22 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு 5,000 பேர் கலந்து கொண்டனர்.
இந்த பணிக்களுக்குப் பத்தாம் வகுப்பு மட்டுமே தகுதி ஆகும். ஆனால், விண்ணப்பித்துள்ள 5000 பேர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களில் முதுகலை பட்டதாரிகளும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களும் அடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்சேர்ப்பில் சுமார் 800 பேர் கலந்து கொண்டனர். கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் வழங்கப்படும் பணியிடங்களுக்கான பணி நியமனம் வேலூரில் ஏப்ரல் 5ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆட்சேர்க்கை ஏப்ரல் 11ம் தேதி வரை நடத்தப்படும். "விண்ணப்பதாரர்களில் பாதி பேர் பட்டதாரிகள். ஆனால், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு உதவுவதுதான் பணிக்கான தேவை" என கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ஜே.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தை சேர்ந்த 28 வயதான ஒருவர், "அரசு வேலை என்பதாலும், இந்த வேலை பாதுகாப்பை வழங்குவதாலும், எனது தகுதி மற்றும் பணியின் தன்மை பொருந்தாவிட்டாலும் பரவாயில்லை. " எனக் கூறி கால்நடைத் துறை பணிக்கு வாந்திருக்கிறார்.
12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றொருவர், "அரசு வேலைகளுக்கு போட்டி அதிகமாக உள்ளது. இந்த பதவிக்கு கூட, அதிக தேர்ச்சி பெற்றவர்களுடன் தான் போட்டியிட வேண்டி இருக்கிறது" என்று கூறுகிறார்.
இந்த ஆள் சேர்க்கை குறித்து கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் நவநீதகிருஷ்ணன் கூறுகையதாவது, 2015 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கடந்த ஏழு ஆண்டுகளில் இது சில முறை ரத்து செய்யப்பட்டது. கோவிட்-19 காரணமாக தாமதம் ஏற்பட்டது எனக் கூறுகிறார்.
ராணிப்பேட்டையில் 22 காலியிடங்கள் உள்ளன மற்றும் 3,500 வேட்பாளர்கள் பதவிக்கு போட்டியிடுகின்றனர். திருப்பத்தூரில் 23 காலியிடங்கள் உள்ளன, 3,100 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர். ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூருக்கு ஏப்ரல் 19 முதல் 23 வரையிலும், ஏப்ரல் 26 முதல் 30 வரையிலும் ஆள்சேர்ப்பு நடைபெறும். பல பெண் வேட்பாளர்களும் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
பத்தாம் வகுப்பு மட்டுமே தகுதியான இப்பணிகளுக்கு முதுநிலைப் பட்டதாரிகளும், ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களும் போட்டிப் போடுவது, அரசாங்க வேலையின்மீது இருக்கும் மக்களின் ஈடுபாட்டைக் காட்டுகிறது. ஆனாலும், படிப்புத் தகுதி குறைந்து இருக்கின்ற விண்ணப்பதாரர்களின் நிலை கேள்விக் குறியாகிறது. 22 பணியிடங்களுக்கு, 5000 எனும் எண்ணிக்கையில் பங்கு பெறும் பங்கேற்பாளர்களில் 22 பேரைத் தேர்வு செய்வதில் தேர்வுக் குழு திணறுகிறது.
மேலும் படிக்க..
தொடங்கும் பருவமழை - கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க தொடர்பு எண் அறிவிப்பு!
AHIDF கால்நடை உரிமையாளர்களுக்கு கடன் வழங்குகிறது! எப்படி விண்ணப்பிப்பது!