கால்நடை வளர்ப்புத் துறைக்கு, குறிப்பாக கால்நடை வளர்ப்புக்கு இது சாதகமான சூழலாகும். ஏனென்றால் பால் எப்போதும் அத்தியாவசை தேவையில் ஒன்றாகும். தினமும் நமக்கு தேவையான பால் கிடைப்பது குறைந்து வருவதால், பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்து பற்றாக்குறையை சமாளிக்க வேண்டியுள்ளது.
இந்தியாவில் கால்நடைகளை வைத்து பிழைப்பு நடத்தும் விவசாயிகள் பலர் உள்ளனர். சாதாரணமாக காய்கறி விவசாயம் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட மாடு வளர்த்தால், அதிக வருமானம் கிடைக்கிறது.
எப்படி லாபம் பெறலாம்
முதல் படி விலங்குகளை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். குளிரில் இருந்து பாதுகாக்க, மாடுகளின் கோட்டாயில் ஜன்னல்களை சணல் துணியால் மூடி வைத்திருத்தல் நல்லது. குளிர் மற்றும் வெப்பம் மாறும் போது விலங்குகளை நன்கு கவனித்துக்கொள்வது அவசியமாகும்.
பசுக்களுக்கு அவற்றின் உற்பத்திக்கு ஏற்ப சமச்சீர் உணவு அளிக்கப்படுகிறது. கூடுதலாக பச்சை புல் மற்றும் உலர் தீவனம் தினமும் 50 கிராம் கல் உப்பு கொடுக்கப்படுகிறது.
ஜலதோஷத்தால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளைத் தவிர்க்க வெல்லம் மற்றும் கடுகு எண்ணெய் கொண்ட தீவனம் கொடுப்பது நல்லது. கால்நடை மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட நோய்களிலிருந்து மாடுகளைப் பாதுகாக்க, வழக்கமான இடைவெளியில் தடுப்பூசிகள் போடுவது அவசியமாகும்.
கோதுமை உலர்த்தி கால்நடைகளுக்கு கொடுத்து வந்தால் நன்மை பயக்கும். இந்த குறிப்புகள் மூலம் கால்நடை வளர்ப்பை சிறப்பாக செய்திடலாம்.
மேலும் படிக்க:
செங்குத்துத் தோட்டம் அமைக்க அரசு 75% மானியம் வழங்குகிறது
காலநிலை மாற்றம் உணவு விநியோகத்தை குறைப்பதால் உலகளாவிய வறுமை அதிகரிக்கும்: ஐ.நா சபை