தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர், தேசிய கால்நடை குழுமத் திட்டத்தின்கீழ் கால்நடைகளுக்குக் காப்பீடு செய்துப் பயன் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
காப்பீடு இலக்கு (Insurance target)
தேசியக் கால்நடைக் குழுமத் திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் 1500 கால்நடைகளுக்குக் காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3 ஆண்டுகள் (3 years)
ஒரு பசு, ஒரு எருமை, 10 வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் வைத்து இருப்போர் இத்திட்டத்தில் ஒன்று அல்லது மூன்று ஆண்டுகளுக்குக் காப்பீடு செய்து கொள்ளலாம்.
5 கால்நடைகளுக்கு (For 5 cattle)
-
ஒரு நபர் ஐந்து கால்நடை இனங்களுக்கு மட்டுமே காப்பீடு செய்து கொள்ளலாம்.
கறவைப்பசு, எருமை இவ்வினங்கள் 2 வயது முதல் 8 வயதிற்குள் இருக்க வேண்டும்.
-
வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் 1 முதல் 3 வயதுக்குள் இருக்க வேண்டும்.
50% மானியம் (50% subsidy)
பிரிமியத்தில் 50 சதவீதம் மானியத்தில் காப்பீடு செய்து பயனடையலாம்.
சான்றிதழ் (Certificate)
கால்நடை மருந்தகத்தின் உதவி கால்நடை மருத்துவர் கால்நடைகளை ஆய்வு செய்து சான்று வழங்கிய பின்னரே காப்பீடு செய்யப்பட்டு, பொருத்தப்படும்.
இழப்பீடுத் தொகை (Amount of compensation
கால்நடைகள் இறக்க நேரிட்டால், கால்நடை உதவி மருத்துவரால் நேரில் ஆய்வு செய்து வழங்கும் கால்நடைகளின் இறப்புச் சான்றினையும், புகைப்படத்தையும் இணைத்து காப்பீடு நிறுவனத்தில் அளித்தால் இழப்பீடு தொகை வழங்கப்படும்.
அந்தந்த பகுதியிலுள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
கோழிப்பண்ணைக்கு மானியம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை!