1. கால்நடை

ஆடுகளை மழைக்கால நோய்களில் இருந்து பாதுகாக்க- தடுப்பூசியேத் தீர்வு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Goats can be vaccinated to prevent monsoon diseases!

Credit : Unsplash

மழைக்காலத்தில், ஆடுகளுக்கு ஏற்படும் நோய்த்தாக்குதலைத் தவிர்க்க, தடுப்பூசி போட வேண்டும் என கால்நடைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

பிரதானத் தொழில் (The main industry)

திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியில், வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு பிரதானத் தொழிலாக மேற்கொள்ளப்படுகிறது.

ஆடு வளர்ப்பு (Goat rearing)

இறைச்சி, பால், தோல்,உரோமம் மற்றும் உரத்தேவைக்காக ஆயிரக்கணக்கான ஆடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

ஆடுகளைத் தாக்கும் நோய்கள் (Diseases affecting sheep)

பல்வேறு காரணங்களால், வெள்ளாடுகளை, அடைப்பான், துள்ளுமாரி, கோமாரி, தொண்டை அடைப்பான், ஆட்டம்மை போன்ற பல்வேறு நச்சுயிரி நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, மழைக்காலத்தில், ஆட்டின் ஆறு மாத வயதில், அடைப்பான் நோய் தாக்க வாய்ப்புள்ளது.

அறிகுறிகள் (Symptoms)

ஆடுகள் சோர்ந்து காணப்படுதல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் தென்பட்டால், அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி, தடுப்பூசி போட வேண்டும்.

நீல நாக்கு நோய் (Blue tongue disease)

  • இதேபோல், செம்மறியாடுகளுக்கு, மழைக்காலங்களில் நீலநலக்கு நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

  • எனவே ஆண்டுக்கு ஒருமுறை இந்த நோய்க்கான தடுப்பூசி போட வேண்டும் என கால்நடைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தடுப்பூசி அவசியம் (Vaccination is essential)

இதனைக் கருத்தில் கொண்டு கால்நடை விவசாயிகள் சற்று விழிப்புடன் தங்கள் கால்நடைகளுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்.

மேலும் படிக்க...

கோழிப்பண்ணைக்கு மானியம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை!

மாட்டு சாணம் வைத்து கோழிகளுக்கு தீவனம் தயாரிக்கலாம்

மானியத்துடன் கூடிய கால்நடைக் காப்பீடு திட்டம்!

English Summary: Goats can be vaccinated to prevent monsoon diseases!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.