சென்னை கிண்டியில் உள்ள புளூ கிராஸ் அமைப்பு சார்பில் தென் இந்தியாவிலேயே முதன் முறையாக ரூ. 57 லட்சம் செலவில் செல்ல பிராணிகள் மற்றும் கால் நடைகளுக்கான எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது. எரிவாயு தகன மேடையை சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சென்னை வில்லிங்டன் நிறுவன தலைவர் எல்.கணேசன் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் எரிவாயு தகன மேடையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இதில் இந்திய புளூ கிராஸ் தலைவர் சின்னி கிருஷ்ணன், பொது மேலாளர் டான் வில்லியம்ஸ் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
தகன மேடை
பின்னர் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: செல்ல பிராணிகள், கால் நடைகளுக்காக சென்னையில் முதன் முறையாக தகன மேடை அமைத்து இருப்பது நல்ல விசயம். சென்னை மாநகராட்சி சார்பில் உள்ள கால்நடை மருத்துவமனைகள் மேம்படுத்திடவும், தண்டையார்பேட்டையில் கால்நடைகளுக்கான தகன மேடை அமைக்கப்படும். கால் நடைகளை (Livestock) விரும்புகிறவர்களுக்காக இறுதி சடங்குகளை செய்ய மாநகராட்சிக்கு தன்னார்வ அமைப்பான புளூ கிராஸ் உதவியாக இருப்பது மகிழ்ச்சி என தெரிவித்தார்.
கால்நடைகளுக்காக எரிவாயு தகன மேடை அமைத்து இருப்பது மிகவும் மகி்ச்சியளிக்கிறது. நமக்காக உழைக்கும் கால்நடைகள், நம்முடன் உறவாடும் செல்லப் பிராணிகள் என அனைத்தையும் இறந்த பின் முறையாக அடக்கம் செய்யலாம். சென்னை மாதிரி அனைத்து மாவட்டங்களிலும், எரிவாயு தகன மேடையை அமைகக்க வேண்டும்.
மேலும் படிக்க
புரதச் சத்து குறித்த புரிதல் அவசியம் தேவை!
நெற்பயிர் வயல் வரப்பில் பயறு வகை: மகசூலை அதிகரித்து, மன்வளத்தை கூட்டும்