1. விவசாய தகவல்கள்

நெற்பயிர் வயல் வரப்பில் பயறு வகை: மகசூலை அதிகரித்து, மன்வளத்தை கூட்டும்

R. Balakrishnan
R. Balakrishnan
Legumes in paddy field range

பயறு வகை பயிர்களை தழைச்சத்து தொழிற்சாலை என்றும் அழைக்கலாம். வயலில் நெல்லையும் வரப்புகளில் பயறு வகை பயிர்களையும் விதைத்தால் மகசூல் அதிகரிப்பதுடன் மண்வளம் அதிகரிக்கிறது.

நெல் வயல்

நெல் வயல் வரப்பில் உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு பயிரிடுவதால் வளிமண்டலத்தில் காணப்படும் தழைச்சத்தை கிரகித்து அவற்றின் வேர்களில் காணப்படும் வேர்முடிச்சுகளில் சேகரித்து வைக்கும். இதனால் மண்ணில் தழைச்சத்து அதிகரித்து அருகிலுள்ள பயிர்களுக்கு தழைச்சத்து கிடைக்கிறது. இப்பயிர்கள் இருக்கும் இடத்தில் நன்மை செய்யும் பொறிவண்டுகள் அதிகளவில் காணப்படும். இவை நெற்பயிரைத் (Paddy Crops) தாக்கும் இலைச்சுருட்டுப் புழு, தண்டு துளைப்பான் போன்ற பூச்சிகளின் முட்டைகளை உண்டு சேதாரத்தை குறைக்கின்றன. இதனால் பயிர் பாதுகாப்புக்கான செலவும் குறைகிறது.

Also Read : 2 லட்சம் ஏக்கரில் சம்பா பயிர் சாகுபடி: 90% பணிகள் நிறைவு!

தேவையற்ற களைகள்

வரப்பில் தேவையற்ற களைகள் வளர்வது தடுக்கப்படுகிறது. இப்பயிர்களின் மூலம் வருமானம் கிடைக்கிறது. பயறு அறுவடைக்குப்பின் தழையானது தீவனமாகவும் (Fodder) தழைச்சத்து உரமாகவும் பயன்படுகிறது.

ஒரு ஏக்கர் வயலில் நடுவதற்கு ஒரு கிலோ பயறு விதை போதும். வரப்பின் உட்புறம் கீழிருந்து ஒரு அடி உயரத்தில் ஒரு இன்ச் ஆழத்தில் விதையை ஊன்ற வேண்டும். ஒவ்வொரு விதைக்கும் இடையில் ஓரடி இடைவெளி வேண்டும். நெல் விதைப்பு மற்றும் நடவு தினத்தன்று பயறு வகைகளை வரப்பில் நடலாம். தனியாக தண்ணீர் மற்றும் பராமரிப்பு செலவு கிடையாது.

சான்று விதைகளை விதைக்க வேண்டும். அல்லது சேமித்துள்ள விதைகளை அருகிலுள்ள அரசு விதைப் பரிசோதனை நிலையத்தில் (Seed Test Center) 100கிராம் அளவு விதை மாதிரியை கொடுத்து ரூ.30 கட்டணம் செலுத்தினால் முடிவுகள் விவசாயியின் வீட்டிற்கு அனுப்பப்படும்.

சிங்கார லீனா
விதை பரிசோதனை அலுவலர் மதுரை
லயோலா அன்புக்கரசி வேளாண்மை அலுவலர்
சிவகங்கை

மேலும் படிக்க

அதிக மகசூலை அள்ளிக் கொடுக்கும் நட்சத்திர மல்லிகை!

செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 15 டன் வாழைப் பழங்கள் அழிப்பு!

English Summary: Legumes in paddy field range: Increases yield and increases manure Published on: 30 October 2021, 07:31 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.