Animal Husbandry

Friday, 15 January 2021 08:40 AM , by: Elavarse Sivakumar

Credit: Trade India

பாக்கெட் பால்களைவிட மாடு, எருமை போன்றவற்றின் பால்களே சிறந்தது. இதன் காரணமாகவே கால்நடை வளர்ப்போரின் தொழில் சிறப்பாக இருக்கிறது.

ஆனால், நோயைக் கட்டுப்படுத்தும் பால் என்று ஒன்று உண்டு என்றால் அதுதான் ஒட்டகம் பால். நம்ப முடியவில்லையா? உண்மைதான்.

குஜராத்தின் கட்ச் (Kutch) பகுதியில் இந்த பாலுக்கு படுகிராக்கி. அங்கு நாள் ஒன்றுக்கு 1500 லிட்டர் ஒட்டகப்பால் விற்பனையாகிறது.

இந்த மாநிலத்தின் சர்ஹெட் பால் பண்ணை(Sarhad Dairy)உயர் வெப்பநிலையில், பாதுகாக்கப்பட்ட ஒட்டகப்பாலை(HTP), அமுல் பிராண்டில் விற்பனை செய்கிறது.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் (Control Diabetes)

டைப் ஒன் டயாபெடிக்ஸ் (Type-1 Diabetes)நோயாளிகளுக்கு இயற்கையாகவே இன்சுலினை சுரக்கச் செய்வதால், இந்த ஒட்டகப்பால், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்தது.

 


களைகட்டும் விற்பனை  (Weed sales)

இதைத்தவிர இரும்புச்சத்து, வைட்டமின் சி போன்ற சத்துக்களும் ஒட்டகப்பாலில் நிறைந்துள்ளன.

பால் மட்டுமல்ல பால் பவுடர் (Milk Powder Pocket) களும் குஜராத்தின் அனைத்து மெட்ரோ நகரங்களிலும் அமோகமாக விற்பனை செய்யப்படுகின்றன.

ரூ.125க்கு விற்பனை Rate Rs.125

இதில் கொழுப்பு இல்லாமல் சுத்திகரிக்கப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.100க்கும், UHT பேக்கிங் செய்யப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.125க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்பாக லாக்டோஸ் நிறைந்த மற்ற விலங்குகளில் பால், ஒத்துக்கொள்ளாதவர்களுக்கு (lactose-intolerant consumers) ஒட்டகப்பால் சிறந்த ஒன்றாகவேத் திகழ்கிறது.

கொரோனா நெருக்கடி காலத்தில் நாள் ஒன்றுக்கு 500 லிட்டர் வரை விற்பனையான ஒட்டகம் பால், தற்போது நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 500 லிட்டர் வரை விற்பனையாகிறது.

எனவே இங்கு ஒட்டகம் வளர்ப்பு என்பது லாபம் சிறந்தத் தொழிலாக மாறிவருகிறது. சுமார் 200 ஒட்டகங்களை வளர்த்தால், ஒரு ஒட்டகம், நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 லட்டர் பால் கறக்கும். அதனை லிட்டர் ரூ.51 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்துகொள்கின்றனர். இதனைப் புரிந்துகொண்டதால், இளைஞர்கள் பலரும் ஒட்டகம் வளர்ப்பைக் கையில் எடுத்துள்ளனர்.

மேலும் படிக்க...

நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் - விவசாயிகள் கவனத்திற்கு!

பொங்கல் பரிசு இன்னும் வாங்கவில்லையா? கவலைப்படாதீங்க! கால அவகாசம் நீட்டிப்பு!

வீடு கட்டுவோர்க்கு கூடுதல் உதவித் தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)