Animal Husbandry

Sunday, 13 February 2022 08:21 AM , by: Elavarse Sivakumar

சில புழுக்கள் காயத்தை சுத்தம் செய்யவோ அல்லது வலியைப் போக்கவோ சிம்பன்ஸிக்களுக்கு உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளர். பூச்சிகளையேக் காயங்களுக்கு மருந்தாக்கும் சிம்பன்சியின் வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

சிம்பன்சி தங்கள் காயங்களில் பூச்சிகளை களிம்பு போல் தடவுகிறது. இது தொடர்பாக வைரலாகும் வீடியோ பல ஆராய்ச்சிகளுக்கு ஆதாரமாக உள்ளது. தற்போது ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது. வைரலான வீடியோவில், ஒரு சிம்பன்சி தனது மகனின் காலில் பூச்சிகளைப் பயன்படுத்துவதைக் காணலாம். வைரல் வீடியோவில் காணப்பட்ட இந்த சிம்பன்சியை ஓஜோகா சிம்பன்சி திட்டத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, வயது வந்த சிம்பன்சி சுசி முதலில் ஒரு பறக்கும் பூச்சியைப் பிடித்து தனது குழந்தையின் காயத்தை ஆற்றுவதற்காக அதை வாயில் வைத்தது. அதன் பிறகு, சிறிது நேரம் அதை மென்று சாப்பிட்ட பிறகு, தாய் சிம்பன்சி அந்த பூச்சியை தனது குழந்தையின் காயத்தின் மீது தடவியது. தாய் மருந்தாக பயன்படுத்திய பூச்சி எந்த வகை என்பதோ, அதுதொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை.

விலங்குகள் பொதுவாக இயற்கையான முறையில் சிகிச்சை செய்துக் கொள்கின்றன. சில விலங்குகளுக்கு காயங்கள் ஏற்பட்டால், அவை தங்கள் காயங்களை நாக்கால் நக்குவதைக் காணலாம்.

மேலும் படிக்க...

6 யோகாசனங்களைச் செய்து அசத்தும் Dog!

6 ஆண்டுகள்- கழுத்தில் டயருடன் அவதிப்பட்ட முதலை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)