மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 July, 2020 5:25 PM IST
image credit: maalaimalar

கோழி வளர்பில் தீவனப் பராமரிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. கோழி வளர்ப்புச் செலவின் 60-70 சதவிகிதம் அளவு தீவனத்திற்காகவே செலவிடப்படுகிறது. அவ்வாறு கொடுக்கும் தீவனம் வீணாகாமல் முழுமையாக கோழிகளால் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே ஒரு லாபகரமான பண்ணையை உருவாக்க முடியும்.

40க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் கோழிகளுக்கு தேவைப்படுகிறது. இவை நீர், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் என ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. கார்போஹைட்ரேட் (Carbohydrate) மற்றும் கொழுப்புக்களே (Fat) ஆற்றலுக்கு பிரதானமானவை. கொழுப்பில் கார்போஹைட்ரேட் விட 2.25 மடங்கு ஆற்றல் அதிகமாக உள்ளது.

பாரம்பரிய முறையில் கோழிகளுக்கு தானியப் பயிர்களான அரிசி, சோளம், கோதுமை, ஓட்ஸ், பார்லே போன்றவையும் மற்றும் உபதானியப் பொருட்களான நெல் / கோதுமை, உமி, தவிடு போன்றவைகளையும் தீவனமாகக் கொடுக்கலாம். மேலும் மீன் தோல் கழிவுகள், இறைச்சி கழிவுகள், சோயாபீன் எண்ணெய்க் கழிவுகள், கடலை மற்றும் எள்ளுப் புண்ணாக்கு போன்றவற்றையும் கோழித் தீவனமாகப் பயன்படுத்தலாம். இதோடு தாதுக்களும் விட்டமின்களும் கலந்து சரிவிகித உணவாகக் கொடுத்தல் வேண்டும்.

கீழ்காணும் தீவனப் பொருட்கள் நம் நாட்டில் பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சோளம் - Maize

இதில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் செரித்தல் எளிதாகிறது. குறைந்தளவு புரதமும், அதிக ஆற்றலும் கொண்டது. லைசின், சல்ஃபர் அமினோ அமிலங்களைப் பெற்றுள்ளது. மஞ்சள் நிறச் சோளத்தில் விட்டமின் மற்றும் சோன்த்தோடஃபில் நிறமி நிறைந்துள்ளது. இந்த நிறமிகள் தான் சிலவகைப் பறவைகளின் மஞ்சள் தோலிற்குக் காரணம்.

பார்லே - Barley

இதில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால் 15 சதவிகிதத்திற்கு மேல் தீவனத்தில் சேர்க்கக்கூடாது.

ஓட்ஸ் - Oats 

ஓட்ஸிலும் நார்ச்சத்து அதிகமிருப்பதால் 20 சதவிகித அளவே சேர்க்கவேண்டும். இதில் மாங்கனீசு சத்து அதிகம் இருப்பதால் கோழிகளில் கால் பிரச்சினை, இறகை பிடுங்கிக் கொள்ளுதல் மற்றும் தன்னின ஊன் ஊன்றுதல் போன்ற குறைபாடுகளை குறைக்க முடியும்.

''ஏழைகளின் பசு'' என்று அழைக்கப்படும் வெள்ளாடு வளர்பின் நன்மைகள்!

கோதுமை - Wheat 

சோளத்திற்குப் பதில் அதிக ஆற்றல் அளிக்க கோதுமை பயன்படுகிறது.

கோதுமை தவிடு - Wheat bran

இந்த கோதுமை தவிட்டில் மாங்கனீஸ் பாஸ்பரசுடன் சிறிது நார்ச்சத்தும் மிகுந்துள்ளது.

கம்பு - Pearl millet 

கோதுமை போலவே நல்ல ஆற்றல் வழங்கியாக கம்பு செயல்படுகிறது.

அரிசி - Rice 

உடைந்த அரிசி குருணைகள் ஆற்றல் அதிகம் பெற்றுள்ளது. கார்போஹைட்ரரேட் மிகுந்துள்ளது.

Image credit: Indiamart

பாலிஸ் செய்யப்பட்ட அரிசி - Polished rice 

இது ஒரு சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவாகையால் 50 சதவிகிதம் வரை தீவனத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இதில் சிறிது எண்ணெய்ச் சத்தும் உள்ளது. சரியாக பராமரிக்கப்படவில்லை எனில் துர்நாற்றம் வீசத் தொடங்கிவிடும்.

எண்ணெய் நீக்கப்பட்ட பாலிஸ் அரிசி - Deoiled rice polish

எண்ணெய் நீக்கப்பட்டதால் இதில் கொழுப்புச் சத்துக் குறைவே. எனினும் சாம்பல் மற்றும் புரதம் நிறைந்துள்ளது.

வெள்ளைச் சோளம் - Sorghum

இது மஞ்சள் சோளம் போன்றே ஊட்டச்சத்துக்களைப் பெற்று இருந்தாலும் அதை விட வெள்ளைச் சோளத்தில் புரதம் அதிகம். கோழிகள் விரும்பி உட்கொள்ளும். மேலும் இதில் சில அமினோ அமிலங்கள் புண்ணாக்கில் இருப்பதைக் காட்டில் அதிக அளவில் உள்ளன.

கடலைப்புண்ணாக்கு - Groundnut-cake

இதில் புரதம் நிறைந்து காணப்படுகிறது. 40 சதவிகிதம் வரை தீவனக் கலவையில் பயன்படுத்தலாம்.

மீன் தூள் - Fish-meal

இது ஒரு சிறந்த கோழித்தீவனம். இதில் விலங்குப் புரதம் அதிகமாக உள்ளது. இது எலும்பு மீனா அல்லது கலனில் அடைத்த மீனா என்பதைப் பொறுத்து பயன்படுத்தும் அளவு வேறுபடும். இந்திய மீன் துகள்களில் 45-55 சதவிகிதம் புரதம் உள்ளது. மீனில் செதில்கள் இருந்தால் தீவனத்தரம் குறையலாம். எனவே செதில்கள் இல்லாமல் இருப்பது நல்லது.

சுண்ணாம்புக்கல் - Limestone

சுண்ணாம்புச் சத்து அதாவது கால்சியம் மிகுந்தது. எனினும் 5 சதவிகிதம் மேல் கோழித் தீவனத்தில் சேர்க்கக்கூடாது.

பால் உற்பத்தியை 20 %அதிகரிக்கும் அசோலா வளர்ப்பு முறைகள் - கால்நடைத்துறையினர் யோசனை

கடற்சிப்பி ஓடு - Oyster-shell

இதில் 38 சதவிகிதம் வரை கால்சியம் இருப்பதுடன் சுவை மிகுந்தது. சுண்ணாம்பிற்குப் பதில் பயன்படுத்தப்படுகிறது.

ஆதாரம் : தமிழ்நாடு கால்டை துறை

நோய்களைத் துவம்சம் செய்யும் முர்ரா எருமை- பால் பண்ணை அமைக்கச் சிறந்த இனம்

பால் பண்ணைத் தொடங்க விருப்பமா? 1.75 லட்சம் ரூபாய் மானியம் அளிக்கிறது மத்திய அரசு

English Summary: common feedstuffs used for making poultry rations in this country.
Published on: 28 July 2020, 05:08 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now