Krishi Jagran Tamil
Menu Close Menu

பால் பண்ணைத் தொடங்க விருப்பமா? 1.75 லட்சம் ரூபாய் மானியம் அளிக்கிறது மத்திய அரசு

Monday, 20 July 2020 05:09 PM , by: Elavarse Sivakumar

Credit: NBCNews

பால்பண்ணையைத் தொடங்கி லாபம் ஈட்ட நினைப்பவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு 25 சதவீதம், அதாவது 1.75 லட்சம் ரூபாய் மானியத்துடன் 7 லட்சம் ரூபாய் வரை கடன் அளிக்கிறது மத்திய அரசு.

கால்நடைத்துறை

குறைந்த காலகட்டத்தில் அபரித வளர்ச்சி காணும் வேளாண் தொழில் என்றால் அது கால்நடைத்துறைதான். இதிலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருந்தாலும், மற்ற வேளாண் தொழில்களைக் காட்டிலும் மிகக் குறைவு. அதுவே இதன் சாதகமான அம்சம்.

ரூ.7 லட்சம் வரைக் கடன்

கால்நடைத்துறை மற்றும் பால் பண்ணைத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், கால்நடை தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தை கடந்த 2010ம் ஆண்டு முதல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பால் பண்ணைத் தொடங்குவோருக்கு 7 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.

நிபந்தனை

குறைந்தபட்சம் 10 எருமை மாடுகளுடன் பால் பண்ணையைத் தொடங்க வேண்டியது விதி.

ரூ.1.75 லட்சம் மானியம்(Subsidy)

இதில், பொதுப்பிரிவினருக்கு 25 சதவீதம் அதாவது 1.75 லட்சம் ரூபாய் வரையும், பெண்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் 33 சதவீதத் தொகையும், மானியமாக வழங்கப்படுகிறது.

திட்டத்தின் அம்சம் (Scheme Target)

பால் உற்பத்தியைப் பெருக்குவதற்காகவும், கிராமங்களில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காகவும், பால் பண்ணை தொடங்க முன்வருவோருக்கு இந்த சலுகைகளை மத்திய அரசு வழங்குகிறது. நபார்டு எனப்படும் (National Bank for Agriculture and Rural Development )(NABARD) வங்கி மூலம் கடன் வழங்கப்படும்.

மானியம் பெறுவது எப்படி? (How to get Subsidy)

பால் பண்ணை தொடங்குபவர்கள், அதற்கான ஆவணங்களை ஒப்படைத்து, இந்தத் திட்டத்தின் கீழ், நபார்டு வங்கி மூலம் கடன் பெறலாம். பின்னர் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய மானியத்தை, மத்திய அரசு நேரடியாக வங்கிகளுக்கு அனுப்பி வைக்கும். இந்த தொகையை வங்கி, உங்களது வங்கிக்கணக்கில் வரவு வைத்துக்கொள்ளும்.

பிற வங்கிகள் (Other Banks)

நபார்டு வங்கி தவிர, வர்த்தக வங்கிகள், மண்டல வங்கிகள், மாநில- கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கிகளிலும், இந்த திட்டத்தின் மூலம் கால்நடை தொழில் முனைவோர் கடன் பெறலாம். நபார்டு வங்கியின் மூலம் நிதியதவி பெறத் தகுதிபெற்ற, பிற நிதி நிறுவனங்களிலும் இந்தக் கடனை மத்திய அரசு வழங்குகிறது.

சமர்ப்பிக்க வேண்டியவை (Documents )

அடையாளச் சான்று
ஜாதிச் சான்றிதழ்
தொழிலுக்கான திட்ட ஆவணங்கள்

ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற விரும்புவோர், தங்கள் நில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.

மேலும் படிக்க...

நீரழிவு நோய்க்கான சில முக்கிய அறிகுறிகள்- கவனிக்கத் தவறாதீர்கள்!

ஊரடங்கால், இந்தியாவின் தேயிலை உற்பத்தி 54 சதவீதம் குறைந்தது - ஏற்றுமதி பாதிப்பு

 

பால் பண்ணைக்கு கடன் 7 லட்சம் வரை கடன் 25 சதவீதம் மானியம் மத்திய அரசு அளிக்கிறது
English Summary: Center is Giving Loan upto 7 Lakh for opening Dairy Farm

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Monsoon 2020 update on Krishi Jagran Tamil Help App

Latest Stories

  1. ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து, வருஷத்திற்கு 4 லட்சம் சம்பாதிக்கலாம் வாங்க! பார்த்தசாரதி சொல்றத கேளுங்க..!
  2. விவசாயிகள் கடன் பெற உதவும் கிசான் கிரெடிட் கார்டு! - விண்ணப்பிப்பது எப்படி?
  3. 40% மானியத்தில் காய்கறி விதைகள் தொகுப்பு திட்டம்!- பயனடையுமாறு ஆட்சியர் அழைப்பு!
  4. விவசாயத்தில் இரட்டை லாபம் ஈட்ட வேண்டுமா? வேளாண்மை மீன் வளர்ப்பில் ஈடுபடுங்கள்!
  5. இலக்கை மிஞ்சிய குறுவை சாகுபடி - குவியும் நெல் மூட்டைகள்!
  6. நீலகிரிக்கு தொடரும் ரெட் ஆலர்ட்; அதி கன மழைக்கும் வாய்ப்பு!!
  7. வியாபாரச் சான்றிதழ் இல்லாத வணிகர்களும் PM SVANidhi திட்டத்தில் பயன்பெறலாம்!!
  8. மானாவாரி துவரையில் அதிக மகசூல் பெற வேண்டுமா? வேளாண்துறை அளிக்கும் ஆலோசனைகள்!!
  9. சத்தான சமச்சீர் உணவிற்கு அவசியமான கீரைகளும் அதன் நன்மைகளும்!
  10. குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் தரும் காடை வளப்பு!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.