பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 5 February, 2022 10:39 AM IST
Cow Valaikappu

திருப்பூர் அருகே பசு மாட்டுக்கு வளைகாப்பு விழா நடத்தியுள்ளனர். திருப்பூரில் உள்ள நகைக்கடை ஒன்றின் உரிமையாளர் சீனிவாசனுக்கு சொந்தமான தோட்டம், பெருந்தொழுவு, தங்கையன்புதுாரில் உள்ளது. அங்கு நேற்று, பசு மாட்டுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. 'வாசவி கிளப் கேலக்ஸி' கிளப் தலைவர் ஸ்ரீமதி, செயலர் லட்சுமி, பொருளாளர் பிரியா ஆகியோர், வளைகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பசு மாட்டுக்கு வளைகாப்பு (Cow Valaikappu)

பசு மாட்டுக்கு, உடல் முழுவதும் மஞ்சள் பூசி, குங்கும் வைத்து, பட்டு வேட்டி மற்றும் பட்டு சேலை அணிவித்து, கொம்புகளுக்கு, வண்ண வளையல்களை அணிவித்து, மலர்மாலைகள் சூட்டி அலங்காரம் செய்திருந்தனர்.

சீர்வரிசை தட்டுகள் வைத்து, மாட்டுக்கு பழவகைகள் கொடுத்தும், மங்களஹாரத்தி எடுத்தும் வழிபட்டனர். 'வாசவி கிளப் கேலக்ஸி' நிர்வாகிகள் கூறுகையில்,'பசுவின் உடலில், அனைத்து தெய்வங்களும் இருப்பதாக ஐதீகம். அதன்படி, மகாலட்சுமிக்கு வளைகாப்பு நடத்தியுள்ளோம்.

அனைத்து பெண்களும் சுபிட்சமாக வாழ வேண்டுமென வேண்டி, லட்சுமி பூஜையும் நடத்தப்பட்டது' என்றனர். பசுமாட்டிற்க்கு நட்த்தப்பட்ட வளைகாப்பு காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு, மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

ஒருங்கிணைந்த பண்ணையம்: முதல் முயற்சியே வெற்றி கண்ட இயற்கை விவசாய தம்பதி!

தென்னீரா பானம் பொருளாதார புரட்சி ஏற்படுத்தும்: உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் நம்பிக்கை!

English Summary: Cow Valaikappu: a thrilling scene!
Published on: 05 February 2022, 10:39 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now