Animal Husbandry

Sunday, 16 January 2022 10:07 AM , by: Elavarse Sivakumar

பொங்கலை முன்னிட்டு மாடுகளுக்கு சர்க்கரைப் பொங்கலை அதிகளவில் கொடுப்பது, மாடுகளை இறக்கும் சூழ்நிலையை உருவாக்கும் என அரசு மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

3 நாள் திருவிழா (3 day festival)

தமிழகத்தின் பாரம்பரியப் பண்டிகையான பொங்கல் திருவிழா 3 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். முதல் நாளில் விவசாயத்திற்குத் துணை நிற்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கப் பொங்கல் வைத்து வழிபடுவர். 2ம் நாள் உழவனுக்கு துணை செய்யும் மாடுகளுக்கு நன்றிதெரிவிக்கும் நாளே மாட்டுப்பொங்கல்.

மாடுகளுக்கு மரியாதை

இந்த நன்னாளில், மாடுகளைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, மாலை மரியாதை அளித்துப் பொங்கல் படைத்து வழிபடுவர். பின்னர் மாடுகளுக்கு சர்க்கரைப் பொங்கலை வழங்குவது வழக்கம். ஆனால் சர்க்கரைப் பொங்கலை அதிகளவில் மாடுகளுக்கு கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என அரசு மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சர்க்கரை, வெல்லம்

இதுகுறித்து புதுவை பிராணிகள் நல இயக்க தலைவரும், அரசு கால்நடை மருத்துவருமான செல்வமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் மாட்டுப்பொங்கலின் ஒரு பகுதியாக விவசாயிகள் தங்களின் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கல் படையலிட்டு அதில் சர்க்கரை மற்றும் வெல்லம் கலந்து கொடுக்கிறார்கள்.

வயிறு உபாதை

  • சர்க்கரை கலந்த பொங்கலை உண்ணக் கொடுப்பதனால் மாடுகளுக்கு வயிற்று உபாதை ஏற்படும்.

  • வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாகி வயிறு உப்புசம் ஏற்பட்டு செரிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படும்.

  • இறுதியில் மாடுகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும்.

  • இந்தச் சர்க்கரைப் பொங்கலை அதகளவில் கொடுக்கும்போது, மாடுகளின் வயிற்றில் நன்மை செய்யக் கூடிய நுண்ணுயிர் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அழித்து செரிமானத்தைத் தடைசெய்கிறது.

  • இதனால், பாதிக்கப்பட்ட மாடுகள் தீவனம் உண்ணாமல் ஒரு மந்த நிலையில் தள்ளப் படுகிறது.

  • நாளடைவில் வயிற்றில் உள்ள இரைப்பை பெரிதாகி அருகில் உள்ள உறுப்புகளான நுரையீரலில் அழுத்தம் கொடுத்து அதைத் தள்ளுவதால் மாடுகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறுதியில் உயிரிழப்பு ஏற்படுகிறது.

குறைந்த அளவு (Low volume)

எனவேக் கால்நடைகளைக் காப்பாற்ற விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தி விட்டு படைத்த பொங்கலை குறைந்த அளவில் உண்ணக் கொடுக்க வேண்டும். பொங்கலை மறுநாள் வைத்து அது கொதித்த பின் கொடுக்க வேண்டாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க...

கோழியில்லா முட்டை - விபரம் உள்ளே!

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: 300 மாடுபிடி வீரர்களுடன் போட்டி நடத்தலாம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)