Animal Husbandry

Thursday, 27 August 2020 07:39 AM , by: Elavarse Sivakumar

Credit: You Tube

மழைக்காலம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, கால்நடைகளுக்கும் பலவித நோய்களைக் கொண்டுவருகிறது. எனவே இதனைக் கருத்தில் கொண்டு கால்நடை விவசாயிகள் கூடுதல் விழிப்போடு செயல்பட்டால், நோய்களைக் கட்டுப்படுத்துவதோடு, தங்கள் பொருளாதார இழப்பையும் தடுக்கலாம்.

மழைக்காலங்களில் நாட்டுக் கோழிகளைத் தாக்கும் நோய்கள் என்று ஆராய்ந்தால், 5 நோய்கள் முக்கியமானவை. அவை

  • வெள்ளைக் கழிச்சல்

  • சளி மற்றும் சுவாசக் கோளாறு

  • வாத நோய்

  • கோழிக்காய்ச்சல்

  • தோல் முட்டை இடுதல்

இந்த நோய்கள் வருவதற்கு முக்கியக் காரணம் குடற்புழுக்கள்தான். எனவே தாய் கோழிக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறையும், 6 மாதத்திற்கு உட்பட்ட வளரும் இளம்கோழிகளுக்கு மாதத்திற்கு ஒருமுறையும் குடற்புழு நீக்க மருந்து அளிப்பது நல்லது. அந்த மருந்தும்  ரசாயனக் கலப்பு இல்லாமல் இயற்கையான முறையில் தயாரித்ததாக இருப்பது சிறந்தது.

Credit: Grandeur Africa

குடற்புழுநீக்க மருந்து தயாரித்தல்

தேவையான பொருட்கள்

ஆகாசக் கருடன் கிழங்கு       - 500 கிராம்
சோற்றுக்கற்றாழை               - 500 கிராம்
குப்பை மேனி இலை              - 500 கிராம்
பூண்டு                                   - 250 கிராம்
கருஞ்சீரகம்                            -25 கிராம்
மஞ்சள் தூள்                           -100 கிராம்
வேப்பயிலை                          - 500 கிராம்
சீரகம்                                    - 50 கிராம்
சின்னவெங்காயம்                 - 250 கிராம்
மிளகு                                     - 50 கிராம்

செய்முறை :

சீரகம், மிளகு, கருஞ்சீரகம் இவை மூன்றையும் வறுத்து பொடி செய்து கொள்ளவும். மஞ்சள் தவிர்த்து மற்ற பொருட்கள் அனைத்தையும் அரைத்துக்கொள்ளவும். அரைத்த கலவையுடன், மஞ்சள் மற்றும் பொடி செய்தக் கலவையை ஒன்றாகக் கலந்து சிறு சிறு உருண்டைகளாக மாற்றி, கோழிகளுக்கு காலைத் தீவனத்திற்கு முன்பே கொடுக்கவும். அல்லது காலைத் தீவனத்துடன் கலந்து கொடுக்கவும். இந்த மருந்தைக் கோழிகளுக்கு கொடுத்துவந்தால், குடற்புழுக்கள் வெளியே வந்துவிடும்.

இதனை 200 பெரிய கோழிகளுக்கும், 400 வளர் இளம்கோழிகளுக்கும் கொடுக்கலாம். இந்த மருந்தைத் தயாரித்த 5 மணி நேரத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும் என்பது, கால்நடை விவசாயிகள் கவனத்தில் கொள்ளவேண்டியது. 

நோய்யைப் பொருத்தவரை, வருவதற்கு முன்பே தற்காத்துக்கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

தகவல்

அசோலா சதீஷ் குமார்

வேளாண் ஆலோசகர்

திருவண்ணாமலை

மேலும் படிக்க...

கால்நடைகளின் பசுந்தீவனமான அசோலா- இயற்கை முறையில் வளர்ப்பது எப்படி?

சாணத்தில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்க நீங்க ரெடியா? எளிய வழிமுறைகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)