விவசாயிகள் கிராமப்புற குளம், குட்டைகளில் கெண்டை மீன் வளர்ப்பு மூலம் அதிக லாபம் பெறலாம்.
காலத்தின் மாற்றத்திற்கேற்ப விவசாயிகளும் தங்களுக்கு அதிக லாபம் தரும் தொழில்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும் அந்த வகையில் அவர்களுக்கு கெண்டை மீன் வளர்ப்பு லாபம் தரும் தொழிலாக மாறும். விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள ஊராட்சிக் குளங்கள், குட்டைகள் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று, கூட்டுக் கெண்டை மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபடலாம்.
மீன் வகைகள்
கெண்டை மீன்களில் பலவகைகள் இருக்கின்றன. அவற்றில் அதிவேக வளர்ச்சி பெறும் கெண்டை மீன்களைத் தேர்வு செய்து குளங்களில் வளர்த்தால் பெருமளவில் லாபம் பெறலாம்.
தோப்பா கெண்டை, தம்பட கெண்டை, புல் கெண்டை, சாதா கெண்டை போன்ற மீன் வகைகளை குளங்களில் வளர்க்கலாம். இந்த மீன்களை குறிப்பிட்ட இன விகிதத்தின் படி ஒன்றாகக் கலந்து வளர்த்தால் நல்ல உற்பத்தித் திறனும் லாபமும் பெறலாம். இதுவே கூட்டுக் கெண்டை மீன் வளர்ப்பாகும். மேலும்
ஒவ்வொரு வகை மீனும் தனித்தன்மையான உணவுப் பழக்கத்தைக் கொண்டிருக்கும். இந்த வகை கெண்டை மீன்கள் வேகமான வளர்ச்சித் திறன் உடையவை.மற்ற வகையான அதாவது பிறவகை மீன்களுடன் இணைந்து வாழும் தன்மை கொண்டது.
சாதா கெண்டை
புழு, பூச்சிகள், குளத்தடியில் உள்ள சிறு தாவரங்கள், விலங்கின நுண்ணுயிரினங்கள், மட்கிய பொருள்கள் போன்றவற்றை உண்ணும்.
தோப்பா கெண்டை மற்றும் தம்பட கெண்டை
விலங்கின நுண்ணுயிர் மிதவைகள் போன்றவை உண்ணும்.
புல் கெண்டை
நீர்த் தாவரங்களான ஹைடிரில்லா, வேலம்பாசி, வாத்துப் பாசி, புல். இவை தவிர அனைத்து மீன்களுக்கும் பொதுவான உணவாக மட்கிய பொருள்கள், தாவர, விலங்கின நுண்ணுயிர்கள், மிதவைகள், புழு, பூச்சிகள் ஆகியவற்றை உண்ணும் உணவாக அளிக்கலாம்.
உணவுப் பொருள் உற்பத்தி
இது போன்ற கெண்டை வகை வளர்ப்பு மீன்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களின் உற்பத்தியை இயற்கை உரம், செயற்கை உரமிடுதல் போன்றவை நாமே தயாரிக்கலாம். இதனை இவாறு தயாரிக்கலாம் என்பதை தொடர்ந்து காணலாம் ஒரு ஹெக்டேர் நீர்ப் பரப்புள்ள குளத்துக்கு 10 ஆயிரம் கிலோ மாட்டுச் சாணம், 200 கிலோ யூரியா, 250 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 40 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றைச் சேர்த்து அதில் 6-இல் ஒரு பகுதியை, மீன் குஞ்சுகளை குளத்தில் விடுவதற்கு 10 நாட்களுக்கு முன்பே இட வேண்டும். மீதமுள்ள உரத்தை 15 தினங்களுக்கு ஒரு முறை பகிர்ந்து உள்ளே இட வேண்டும். இவ்வாறு செய்வதால் குளத்தில் நுண்ணுயிர்கள் புதிதாக உருவாகி மீன்களுக்கு உணவாக மாறும்.
மேலும் படிக்க: