1. கால்நடை

மீன்களை நீந்துவது ஏன் தெரியுமா? முழு விபரம் உள்ளே!பு

KJ Staff
KJ Staff

மீன் நீர் வாழ் உயிரினம் என நாம் அனைவரும் அறிந்ததே, ஆனால் வசிக்கும் நீரின் தன்மையினை பொறுத்து அதல் இருக்கும் மீனின் தன்மையும் மாறு படுகிறது. பரவலாக பார்க்கும் போது மீன்கள் 5 விதமான நீரில் வளர்கிறது எனலாம்.

 • நன்னீர் வளர்ப்பு
 • உவர்நீர் வளர்ப்பு
 • குளிர்நீர் வளர்ப்பு
 • வண்ண மீன் / அலங்கார மீன் வளர்ப்பு
 • கடல்நீர் வளர்ப்பு

நன்னீர் மீன் வளர்ப்பு (Freshwater aquaculture)

பொதுவாக இவ்வகையான மீன்கள் குளங்கள், நீர்த்தொட்டிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர் நிலைகளில் வளர்க்க படுகின்றது. மீனின் உற்பத்தியினை பெருக்க மீன் வளங்களை திறமையாக கையாள்வது மிக முக்கியமாகும். அவற்றில் முதன்மையானது குளத்தைப் பராமரிப்பது மற்றும் மண் , நீரின் தன்மைக்கு ஏற்றவாறு உரமிடுதலாகும்.

முக்கியம்சங்கள் (Highlights)

மீன்வளர்ப்பில் அடிப்படையாக கவனிக்க வேண்டியது உணவு சுழற்சி ஆகும். நன்னீர் வளர்ப்பில் ஆதாரம் தாவர நுண்ணுயிர் மிதவைகள் ஆகும். இந்த நுண்ணுயிர்கள் நீரினை பச்சை நிறமாக மாற்றி, நுண்ணுயிர்ப் பெருக்கத்தை அதிகரிக்கிறது. இதனால் இருப்புச் செய்யும் மீன்களுக்கு இதுவே ஒரு இயற்கை உரமாக மாறுகிறது.  கரியமில வாயு, தண்ணீர் மற்றும் சூரிய ஒளி என இவையனைத்தும் இருந்தாலும் மிதவை தாவர நுண்ணுயிர்களுக்கு கனிமச்சத்துக்கள் அவசியமாகிறது. மிதவை தாவர நுண்ணுயிர்கள் வளர்வதற்க்கும் மற்றும் குளத்தின் உற்பத்தி திறனிற்கும் தேவையான சத்துக்கள் நீரில் இருக்க வேண்டும். மண் மற்றும் நீரின் மேலாண்மையை பொருத்தே குளத்தில் உள்ள இருப்பு மீன்களுக்கு, இயற்கை உணவு கிடைக்கும்.

Salted Water Fish

உவர்நீர் வளர்ப்பு (Brackish water culture)

உவர் நீர் வளர்ப்பில் நீரின் உப்புத்தன்மையை தவிர, மற்றவைகள் அனைத்தும் நன்னீர் மீன் வளத்தை போன்றே இருக்கும். உவர்ப்புத்தன்மை என்பது நீரில் கரையாமல் உள்ள உப்பின் அளவை குறிக்கும். பொதுவாக உவர்  நீர் குளத்தில் உப்புத்தன்மையானது  0.5% - 30%  வரை இருக்கும். இந்த உப்புத்தன்மையினை இரண்டு காரணிகள் நிர்ணயிக்கின்றன , ஒன்று அருகிலிருக்கும்  சமுத்திரம் மற்றொன்று நிலவிவரும் பருவ நிலை. 

நீரின் தன்மைக்கு ஏற்றவாறு அதில் இருக்கும் தாவரம்  மற்றும் விலங்கினங்கள் மாறுபடுகிறது. வினையியல் மாற்றம், வேதியில் மாற்றம் போன்ற காரணங்களால் நீரில் உள்ள  உப்புத்தன்மை உணவை மாறி மீன்களுக்கு ஊட்டச்சத்தாக அமைந்து விடுகிறது. பொதுவாகவே  உவர் நீரில் வளரும் மீன் இனங்கள் இயற்கையிலே அதிக உப்பைத் தாங்கி  வளரக்கூடிய திறன் கொண்டவை. பென்னேயிஸ் மோனோடான் வகை இறால்கள் அதிகமாக உவர் நீரில் உற்பத்தியாகின்றன. இருப்பினும் உவர் நீரில் அதிக அளவிலான இறப்புகள் இருக்கும். நன்னீருடன் ஒப்பிடுகையில் வளர்ச்சி விகிதம் சற்று குறைவாக இருக்கும். உப்புத்தன்மை 10% குறைவாக இருந்தால் 15% -30% உள்ள உப்புத்தன்மையில் பென்னேயிஸ் மோனோடான் நன்றாக வளரும். ஆனால் நன்னீரில் 30 நாட்களுக்கு மேல் உயிர் வாழ முடியாது.

புள்ளியில் விவரங்களை அடிப்படையாக கொண்டு பார்க்கும் போது  நன்னீரைவிட உவர்நீரில் தான் அதிக அளவிலான மீன்களை வளர்க்கின்றார்கள். ஆனால் உவர்நீர் உற்பத்தியை விட நன்னீரின் உற்பத்திதான் அதிகமாக இருக்கிறது. இதற்கு  காரணம் ஊட்டச்சத்து மிக்க உணவு மீன்கள் அல்லாது பிற உயிரினங்கள் இல்லாததே ஆகும். ஆதலால் நிறைய உரங்கள் மற்றும் எருக்கள் இட வேண்டும்.

உவர்நீரில் மீன்கள் மற்றும் இறால்களுக்கு நீரினடியில் இருக்கும் பாசி அடிப்படை உணவாகும். இந்த பாசி மணல் மேல் அல்லது நீரின் மேல் இருக்கும். இது தேவையான மீன்களுக்கு தேவையான இரும்புச்சத்துக்களை அடி தள  மண்ணிலிருந்து எடுத்துத்தரும். அதே போன்று உவர்நீர் உரமிடுதல் என்பது முற்றிலும் மற்ற மீன் வளத்தைவிட மாறுபட்டது. ஊட்டச்சத்து என்பது நீரின் தன்மைக்கு ஏற்ப கிடைக்கும்.

Chilled Water Fish

குளிர் நீர்  வளர்ப்பு (Cold water culture)

குளிர் நீர் மீன்கள் என்பது 100’C-200’C வெப்ப நிலையில் உயிர் வாழக்கூடியது. இவ்வகை மீன்கள் பெரும்பாலும் குளிர் பிரதேசங்களிலும்,  உயர் மலைகளின் மேல்மட்ட நீர் நிலையிலும் மற்றும் வெப்ப பகுதியில் உள்ள இளவேனிற் நீர்நிலைலும் இவ்வகை மீன்கள் வளர்கிறது. இமய மலை மற்றும் பெனின்சுலா பகுதிகளில் உள்ள நீர்நிலைகள்,  நீர் ஓடைகள் , சிற்றருவி, நீர்ச்சுழல், ஏரிகள் மற்றும் நீர்த் தேக்கங்கள் ஆகிய இடங்களில் குளிர் நீர் மீன்கள் வசிக்கின்றன.

Colour Fish

வண்ண மீன் வளர்ப்பு     

பெரும்பாலான இல்லங்களில் செல்ல பிராணிகளின் பட்டியலில் இன்று வண்ண மீன்கள் மற்றும்  அலங்கார மீன்கள் இடம் பெற்றுள்ளது எனலாம். எனினும் இவ்வகை மீன்களை வளர்க்கும் போது மிகுந்த சிரத்தையுடன் கவனிக்க வேண்டும். இவ்வகை மீன்களை வளர்ப்பது சற்று சவாலானது எனலாம்.

வண்ண மீன்கள் மற்றும்  அலங்கார மீன்கள் பண்ணைகளில் இருந்தோ, அருங்காட்சியகத்தில் இருந்தோ வாங்க படுகிறது. இதனால் இவ்வகை மீன்களின் குணாதிசியங்கள் மற்ற மீன்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. மேலும் இவ்வகை மீன்களால் மற்ற வகை மீன்களுடன் இருக்க இயலாது. குறிப்பிட்ட அளவு நீரில் ஒரே விதமான மீன்களுடன் முட்டையிட்டு இனத்தை பெருக்குகின்றன.

முட்டையிடும் மீன்கள்

பொதுவாக வளர்ப்பு மீன்கள் அதன் இனப்பெருக்கத் தன்மையையினை பொறுத்து 2 வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை முட்டையிடுவன மற்றும் உள் பொரி முட்டையிடுவன என்பனவாகும். இவ்வகை  மீன்கள் முட்டையிடும் போது பாதுகாப்பாக முட்டையைப் புதைத்து வைக்கும். ஒவ்வொரு இனமும் முட்டையை ஒவ்வொரு விதமாக பாதுகாக்கிறது. வாயில் வைத்து முட்டையைப் பாதுகாப்பவை,  கூடுகட்டி பாதுகாப்பவை, முட்டையை சுமந்து கொண்டே திரிபவை எனப் பல வகை இனங்கள் உள்ளன. அலங்கார மீன் வளர்க்கும் போது அடிப்படையில் கவனிக்க வேண்டியது, வளர்ப்பதன் நோக்கம்,  இனப்பெருக்கம் மட்டும், வளர்ப்பு மட்டும்  என இடவசதியை பொறுத்து இனப்பெருக்கம் மற்றும் வளர்ப்பு மேற்கொள்ளலாம்.

தொட்டிகளை எவ்வாறு தேர்தடுப்பது?

அலங்கார மற்றும் வண்ண மீன்களை வளர்க்கும் போது சாதாரணமான  சிமெண்ட் தொட்டிகளிலோ அல்லது  கண்ணாடி தொட்டிகளிலோ வளர்க்கலாம். சிமெண்ட் தொட்டிகள் பராமரிக்க எளிதாக மற்றும் நீடித்து இருக்கும். ஒரு இனத்தையோ அல்லது  இணக்கமான  இரண்டு அல்லது மூன்று இனங்களை  ஒரே தொட்டியில் வளர்க்கலாம். மீன் வளர்ப்பிற்கு நிலத்தடி கிணறுகள் / ஆழ் குழாய் கிணறுகள் சிறந்ததாக உள்ளன.

உணவு மேலாண்மை

மீன்களுக்கு தேவைப்படும் உணவு மற்றும் உணவின் வகை மீனின் அளவை பொறுத்தே அமையும். பொதுவாக மீன்களுக்கான உணவு ஒரு நாளைக்கு இரண்டு முறை அல்லது தேவையை பொறுத்து வழங்கப்படும். உணவாக இடுவதில் தினம்  தயார் செய்ய பட்ட  கடைகளில் விற்கும்  உணவுகள் மட்டும் இன்றி, மண்புழு போன்றாவற்றையும் அடிக்கடி கொடுக்கலாம். மீனின் வளர்ச்சிக்கு இது உதவும். இளம் மீன்கள் இன்ஃபுசோரியா, ஆர்டிமியா, டாஃப்னியா, கொசு முட்டைகள், ட்யூபிஃபெக்ஸ் மற்றும் புழுக்கள் முதலியவற்றை உணவாக கொடுக்கலாம்.

Sea Fish

கடல் நீர் வளர்ப்பு (Seawater Cultivation)

பொதுவாக நீர் நிலைகள் மற்றும் ஆறுகள் இறுதியில் கடலில் சென்றுதான் கலக்கின்றன. நீரோடைகள், அருவிகள் போன்றவற்றைத் தவிர மற்ற அனைத்து (எளிதில் வறண்டு போகிற) நீர்ப்போக்குகளும் இறுதியில் கடலில் சென்று கலந்துவிடும்.இதனால் கடற்கரை ஓரங்களில் பல இடங்களில் ஆறுகள், நீரோடைகள், சிற்றருவிகள் வந்து கலப்பதைக் காணலாம். ஆறுகள் வந்து சங்கமிக்கும் இடங்களில் நன்னீர் மற்றும் உவர்நீர் கலந்த ஒரு புதிய நீர்ச் சூழல் உருவாகும். இதனை  அமில செறிவு மாறா மண்டலம் என்று அழைக்கப்படுவதுண்டு. கடல் முகத்துரை என்பது கடல்நீர் நன்னீர் கலக்கப்பட்டு அதன் உப்புத்தன்மை நீர்க்கப்படும் இடம் ஆகும்.

நோய்கள் (Disease)

மீன்களுக்குப் பொதுவாகவே  நோய் எதிர்ப்புசக்தி  இயற்கையாகவே  அமைந்துள்ளது. இதன் வெளிப்பகுதி முழுவதும் வழவழப்புத்தன்மையுடனும் , நோய்கிருமிகள்  உடலுக்குள் நுழைய முடியாதபடி ஒரு தடுப்புச் சுவர் போல அமைந்திருப்பதால்  நோய்க்காரணிகளை எதிர்க்கும் சக்தி கொண்டுள்ளது. இது தவிர ஒட்டுண்ணிகள் மீன்களின் உடம்பில் நுழையும்போது, அவற்றை காப்புறையிட்டு செயலிழக்கச் செய்து விடுவதால் மீன்கள் இயற்கையாகவே  ஆரோக்கியமானதாகும். இருப்பினும் சில சமயங்களில் சுற்றுப்புறச் சூழல் மாசுபட்டினால் நோய் பரவுகிறது.  அவை பின்வருமாறு

 • ஒட்டுண்ணிகளின் தாக்குதல் அதிகமானால் மீன்களின் இயல்பான நிறம் மாறி, ‘சாம்பல்’ அல்லது ‘நீல’ நிறத்தில் காணப்படும் மற்றும் துடுப்புகள் சிதைந்து காணப்படும்

 • வழக்கத்திற்கு மறக்க குளத்தின் அடியிலோ அல்லது ஓரங்களிலோ அடிக்கடி உரசும்,  நீரின் மேற்பரப்பில் வந்து நீரை வாலால் அடித்து விட்டுச் செல்லும்

 • உடலின் மேற்பாகத்தில் பரவலாக ‘வியர்வைத் துளிகள்’ போல் இரத்தம் வெளிப்படும்

 • சதைப்பகுதிகளில் பருக்கள் போன்றோ, காயங்கள் போன்றோஅல்லது புண்கள் போன்றோ காணப்படும்

 • மீனின் கழிவு நூல் போல ‘திப்பி திப்பியாக’ வெளிப்படும்

 • செவுள்களில் உத்திரம் உறைந்து, கருப்பு நிறத்தில் கோடுகள் போல காணப்படும்

 • செவுள்கள் செந்நிறத்தை இழந்து, வெளுத்துக் காணப்படும்

 • சுவாசிக்க முடியாமல் செவுள் மூடிகளை வேகமாக அசைத்துக் கொண்டு இருக்கும்

 • உடலில் வீக்கங்கள் காணப்படும்

 • துடுப்புகள் அரிக்கப்பட்டு, அவற்றில் மடிப்புகளும் காணப்படும்

 • சரியாக உணவு எடுத்து கொள்ளாது.

 முக்கிய நோய்கள் (Major diseases)

 • பாக்டீரியா நோய்கள்

 • பூஞ்சாண நோய்கள்

 • ஒட்டுண்ணிகள்

வளர்ப்பு மீன்களில் பெரும்பாலான நோய்கள் இவைகளினால் பரவுகின்றன. முறையான நோய் தடுப்பு மேற்கொள்ளும் போது எளிதில் இதனை தவிர்க்கலாம்.  

Anitha Jegadeesan

Krishi Jagran

English Summary: How Many Of Them Know About Fish? Here Are Some Interesting Facts : Explore The Aquaculture

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.