கரூரில் உள்ள மணல்மேடு ஆட்டுச் சந்தையில் சுமார் ரூ. 1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
கரூர் மாவட்டம், மணல்மேடு பகுதியில் கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகில் வாரம் தோறும் ஆட்டுச் சந்தை நடைபெற்று வருகிறது. தனியாருக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்றுவருகின்ற இந்த ஆட்டு சந்தையில் சுற்று வட்டார பகுதிகளான அரவக்குறிச்சி, தென்னிலை, க.பரமத்தி, சின்னதாராபுரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் அண்டை மாவட்டங்களான நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயக் கூலி தொழிலாளர்கள் அவர்களது கூடுதல் வருமானத்திற்காக ஆடுகளை வளர்த்து விற்பனைக்காக இந்த வாரச் சந்தைக்கு கொண்டு வருவது வழக்கம் ஆகும்.
7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு!
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், முன் அனுமதி பெற்று இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் ஆட்டுச் சந்தையில் செம்மரி ஆடு, வெள்ளாடு, கொடியாடுகள் உள்ளிட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இந்த வாரச் சந்தைக்குப் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த வியாபாரிகள் அதிகாலை முதலே தங்களுக்கு தேவையான ஆடுகளை வாங்கி சென்ற வண்னம் இருந்தனர்.
வாரச் சந்தைக்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேல் எண்ணிக்கையிலான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன. ஒரு ஆட்டின் விலை சுமார் 5 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆனது. இன்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் சுமார் 1.5 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனை அடுத்துச் சந்தைக்கு ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மேலும் படிக்க
ரூ. 100 போதும்! ரூ. 16 லட்சம் லாபம் பெற இன்றே விண்ணப்பியுங்க!!