இறைச்சிக் கோழிகள் என்பவை இறைச்சித் தேவைக்காக (கறிக்காக) வளர்க்கப்படுபவை. 6லிருந்த 8 வாரங்கள் வயதுடைய இளம் ஆண் மற்றும் பெண் கோழிகள் இறைச்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. நாளுக்குநாள் கோழி இறைச்சி தேவை அதிகரித்து வருகிறது. நீங்களும் அரசு மானிய உதவியுடன் கோழிப்பண்ணை அமைத்து நல்ல லாபம் பெறலாம்.
கோழி இறைச்சியில் அதிக புரதம் மற்றும் நார்சத்து உள்ளதால் மக்களும் அதிகம் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். நீ்ங்களும் ஒரு கோழிப்பண்ணை அமைக்க விரும்புகிறீர்களா? அதற்கான அமைப்பு முறைகளையும், கோழி வளர்ப்பு குறித்த வழிமுறைகளையும் இதில் காணலாம்.
பண்ணை / கொட்டகை அமைப்பு
ஒரு குஞ்சுக்கு 930 செ.மீ 2 என்ற அளவில் நல்ல காற்றோட்டமான இடவசதி தேவை. பிற கொட்டகைப் பராமரிப்புகள் முட்டைக் கோழிகளைப் போலவே பின்பற்றப்படுகின்றன.
உணவூட்டம்
2 வாரம் வரையிலும் 5 செ.மீ அளவும் 3 வது வாரத்திலிருந்து 10 செ.மீ அளவும் ஒரு குஞ்சுக்குக் கொடுக்கவேண்டும். குஞ்சு வளர வளர தீவன அளவை அதிகப்படுத்திக் கொள்ளலாம். தீவனத்தொட்டியை பாதிக்கு மேல் நிரப்பக்கூடாது. குழாய் தீவன முறையாக இருப்பின் 100 குஞ்சுகளுக்கு 12 கிலோகிராம் தீவனத்தை 3 முறையாகப் பிரித்து அளிக்கவேண்டும்.
இறைச்சிக் கோழித் தீவனக்கலவை
இறைச்சி கோழிகளுக்கு மஞ்சள் சோளம், தீட்டப்பட்ட அரிசி, சோயாபீன் துகள், கடலைப் புண்ணாக்கு, உப்பின்றி உலர்த்தப்பட்ட மீன், தாதுக்களின் கலவை, உப்பு மேலும் இவைகளைத் தவிர வெளியில் பரிந்துரைக்கப்பட்ட அளவில் கலந்து விற்கும் வணிக ரீதியான கலப்புத் தீவனங்களையும் அளிக்கலாம்.
தண்ணீர்
-
2x2 லிட்டர் கொள்ளளவுள்ள நீர்த்தொட்டியில் 2 வார வயதுடைய 100 குஞ்சுகளுக்கு வைக்கலாம்.
-
3 வார வயதுடைய குஞ்சுகளுக்கு 2 x5 லிட்டர் அளவு கொண்ட தொட்டிகளில் அளிக்கவேண்டும்.
எப்போது புதிய, தூய தண்ணீரை வழங்கவேண்டும்.
-
அடைகாக்கும் தருணங்களில் சரியான கவனிப்பும் நீர் ஆகாரமும் அவசியம். குஞ்சுகளின் இறப்பு எண்ணிக்கை 2 சதவிகிதத்திற்கு அதிகமாக இருந்தால் அடைகாப்புப் பராமரிப்புகள் முறையாக இருக்கின்றனவா என்றும், இறந்த குஞ்சுகளின் பிரேதப் பரிசோதனையின் முடிவுகளையும் வைத்து இறப்புக்கான காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்தல் வேண்டும்.
-
அடைக்காப்பானில் வெப்பநிலைய வாரத்திற்கு 3 செல்சியஸ் என்ற அளவில் குறைத்துக் கொண்டே வரவேண்டும். அடைக்காப்பானை நீக்கும் போது குஞ்சுகளுக்கு 40 வாட்ஸ் ஒளி விளக்கு என்ற அளவில் வெளிச்சம் வழங்கப்படவேண்டும்.
-
100 கோழிகளுக்கு ஒரு நாளைக்குத் தேவையான உணவு மற்றும் நீரின் அளவை அறிந்து கொள்ள கீழ்க்கண்ட சூத்திரத்தின் மூலம் அறியலாம்.
-
100 கோழிகளுக்குத் தேவையான தீவனம் கிலோகிராமில் வயது நாட்களில் 14.4 நீரின் அளவு லிட்டரில் (100 கோழிகளுக்கான) வயது நாட்களில் 12.0 சாதாரண சூழ்நிலையில் மேற்கண்ட சூத்திரத்தின்படி கணக்கிட்டுக் கொள்ளலாம். பருவ நிலை (அ) தட்பவெப்ப நிலைகளைப் பொறுத்து 5-10 சதம் வரை வேறுபடலாம்.
இறைச்சிக் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை
-
பிறந்து 5 நாட்களான கோழிகளுக்கு வெக்கை நோய் தடுப்பூசி (லசோட்டா (அ) எப் தடுப்பு மருந்து கொடுக்க வேண்டும்.
-
10-14 நாட்களான கோழிகளுக்கு குடல் அழற்சி நோய் தடுப்பூசி (ஐபிடி) தடுப்பு மருந்து கொடுக்க வேண்டும்.
-
24-28 நாட்களான கோழிகளுக்கும் அதே குடல் அழற்சி நோய் தடுப்பூசி (ஐபிடி) தடுப்பு மருந்து கொடுக்க வேண்டும்.
பூஞ்சை நச்சு / காளான் நச்சு
கோழிக்குஞ்சுகளின் தீவனத்தில் இப்பூஞ்சை நச்சு இருந்தால் அது முட்டை உற்பத்தி மற்றும் கோழி வளர்ச்சியைப் பாதிக்கிறது. இது கோழியின் முட்டையிடும் திறன், கருவுறுதிறனைப் பாதிக்கிறது. கோழிகளை விட இப்பூஞ்சை நச்சு வாத்துக்களை அதிகம் பாதிக்கிறது.
எனவே தீவனங்களை இப்பூஞ்சை நச்சு தாக்காமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். ஈரப்பதம் 11 சதவிகிதம் மேல் இருந்தால் பூஞ்சை வளர்ந்து விடும். நன்கு தீவனங்களை உலர்த்துதல், காற்றுப் புகாத இடத்தில் வைத்தல், ஈரப்பதத்தைக் குறைத்தல் மூலம் தீவனத்தை பூஞ்சை பாதிப்பிலிருந்து பாதுகாக்கலாம். நச்சுக் கட்டுப்பாட்டு மருந்து அல்லது பூஞ்சைத் தடுப்பு மருந்துகளைத் தீவனத்தில் கலப்பதும் சிறந்தது.
கிருமிநாசினிகளும் பயன்பாடும்
1.லைசோல்
1-2 சதவிகிதம் கரைசலைப் பயன்படுத்தலாம். கோழிப்பண்ணையில் பயன்படுத்தும் அனைத்துக் கருவிகள், நடக்கும் பாதை போன்றவற்றைச் சுத்தம் செய்யச் சிறந்தது.
2.சுண்ணாம்புப் பொடி
சுண்ணாம்பு கரைசல் கொண்டு சுவர்களுக்கு வெள்ளையடித்தல் பல்வேறு வகை தொற்றுக் கிருமிகளை நீக்கக்கூடியது. தோலில் பட்டால் அரிப்பை ஏற்படுத்தும்.
3.சலவை சோடா
இது கோழிகள் இல்லாத வீட்டின் தரையை சுத்தப்படுத்தப் பயன்படுகிறது.
4.ஃபினால்
நச்சுத்தன்மை குறைவு ஆனால் விலை அதிகம் 2-4 சதவிகிதம் கரைசலைப் பயன்படுத்தி வீடுகளையும், கருவிகளையும் சுத்தப்படுத்தலாம்.
மேலும் படிக்க...
வாழ்நாளில் 4 லட்சம் லிட்டர் வரைப் பால் கொடுக்கும் மாடு எது தெரியுமா?
லட்சத்தில் சம்பாதிக்க.... குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் கோழி வளர்ப்பு!!
வருமானத்தை இரட்டிப்பாக்கும் "தோடா எருமைகள்" - 500 கிலோ பால் கறக்கும் திறனுடையது!