1. கால்நடை

வாழ்நாளில் 4 லட்சம் லிட்டர் வரைப் பால் கொடுக்கும் மாடு எது தெரியுமா?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Do you know which cow gives up to 4 lakh milk in a lifetime?

பால் என்றாலே அது பெரும்பாலும் பசும்பாலைத்தான் குறிக்கும். எத்தனை வகைப் பால்கள் விற்பனைக்கு வந்தாலும், பசும்பாலின் சத்து, உடல் ஆரோக்கியத்திற்குக் காலம் காலமாக அடிப்படையாக அமைந்திருக்கிறது.

அதனால்தான் பசும்பால் குடித்துப் பழகியவர்கள், எப்போதுமே அதையே நாடுவர். பாக்கெட் பால்களை பெரும்பாலும் தவிர்த்துவிடுவர்.

சரி இந்த செய்தியில் பசு மாட்டைப் பற்றிய பல ஸ்வாரஸ்யத் தகவல்களைப் பட்டியலிடுகிறோம். வாருங்கள் பார்க்கலாம்.

காளை (Bull)

பசு மாட்டின் ஆண் இனமே காளை என்றும், அதன் குட்டி, கன்று என்றும் அழைக்கப்படுகிறது.

  • பசு மாட்டால் மாடிப்படியை (Steps) ஏற முடியும். ஆனால் இறங்க முடியாது. ஏனென்றால், அதன் முழங்கால் சரியாக வளைந்து கொடுக்காது.

  • பசு மாடு முதல் முறை குட்டி ஈன்ற பிறகுதான் பால் (Milk)கொடுக்கும்.

  • பசு மாடு தனது வாழ்நாளில் (Lifetime) கிட்டத்தட்ட 2 முதல் 4 லிட்டர் லட்சம் வரைப் பால் கொடுக்க வல்லது.

  • ஒரு நாளில் 10 முதல் 15 முறை உட்கார்ந்து (Sit) எழுந்திருக்கும்.

  • சாதாரணமாக 500 கிலோ எடை உள்ள பசு மாடு, ஆண்டுக்கு சுமார் 10 டன் சாணியைக் கொடுக்கும்.

  • ஒருநாளில் 6-7 மணி நேரம் இரை உண்ணவும், 7-8 மணி நேரம் அதனை அசைபோடவும் எடுத்துக்கொள்ளும்.

  • அசைபோடுவதற்கு நாள் ஒன்றுக்கு, 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் முறைத் தனது தாடையை அசைக்கிறது.

  • ஒரு பசுமாடு நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 லிட்டர் சிறுநீரும், 15 முதல் 20 கிலோ சாணியையும் வெளியேற்றுகிறது. இன்னும் பெரிய மாடாக இருந்தால் அந்த அளவு அதிகமாகும்.

  • பசு மாடு ஒரு நாளில் சுமார் 100 லிட்டர் வரைத் தண்ணீர் குடிக்க வல்லது.

  • மாடு பற்களால் புல்லைக் கடிப்பது கிடையாது. நாக்கு மற்றும் அதன் ஈறுகளால், பிடுங்கிச் சாப்பிடுகிறது.

  • பசு மாட்டிற்கு ஒரு வயிறுதான் உள்ளது. ஆனால், அதில் உணவை ஜீரணிப்பதற்காக 4 பகுதிகள் உள்ளன.

  • மாட்டின் கண்கள் இருபுறமும் அமைந்திருப்பதால் கிட்டத்தட்ட 4 பக்கமும் (360 டிகிரி முழு வட்டம்) ஒரே சமயத்தில் பார்க்க வல்லது.

  • பசு மாட்டின் நுகர்வு மிகவும் கூர்மையானது. சுமார் 6 -8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பசுமையை நுகர்ந்து கொள்ளும்.

  • கறக்கும் பசு மாடு நாள் ஒன்றுக்கு சுமார் 40-50 லிட்டர் உமிழ் நீரைச் சுரந்து ஜீரணத்திற்கு அனுப்புகிறது.

  • பசு மாட்டின் உடல் வெப்பநிலை (Temperature) 101.5 டிகிரி ஃபாரன் ஹீட் (Fahrenheit).

  • உலகத்தில் உற்பத்தியாகும் மொத்தப் பாலில் 90 சதவீதம் பசும்பால்தான்.

  • உலகிலேயே அதிகமாகப் பால் சுரந்த பெருமை ஹோல்ஸ்டைன் இனத்தைச் சேர்ந்த மாட்டையேச் சேரும். அது ஒரு ஆண்டில் சுமார் 26,890 கிலோ லிட்டர் பாலைச் சுரந்தது.

  • ஒருநாளில் 97 கிலோ பாலைச் சுரந்து உலகச் சாதனை செய்த மாட்டின் பெயர் உர்பே ஆகும். இதுவரை அதிக நாட்கள் வாழ்ந்த மாட்டின் வயது 48 ஆண்டுகள் 9 மாதங்கள் ஆகும்.


மேலும் படிக்க...

சுட்டெரிக்கும் சூரியன்- கால்நடைகளைப் பராமரிப்பதில் கூடுதல் கவனம் தேவை!

பால் பண்ணையில் கூடுதல் லாபம் பெற வேண்டுமா?

கன்று ஈன்ற மாடுகளைப் பராமரிக்கும் வழிமுறைகள்!

 

English Summary: Do you know which cow gives up to 4 lakh milk in a lifetime? Published on: 17 March 2021, 10:20 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.