மனிதர்களாக இருந்தாலும் சரி, கால்நடைகளானாலும் சரி, உலகின் உன்னதமான உறவு என்றால் அது தாய். அந்த தாயின் பாலே எப்போதும் சிறந்த உணவு.
பசு, குதிரை, பூனை, நாய் குட்டிகளை ஈனும் பொழுது தாயானது இறக்க நேரிட்டாலோ, தாய்ப்பால் பற்றாக்குறை ஏற்பட்டாலோ பசுவின் பாலே மாற்று உணவாகிறது. இதேபோல், தாயை இழக்கும் கன்றுகளைப் பராமரிப்பது என்பது சற்று சவால்மிகுந்தது.
இளங்கன்றுகளுக்கான உணவு (Food for calves)
-
கன்று ஈன்ற வேறு பசுவின் சீம்பாலை சூடுபடுத்தாமல் தாயில்லா கன்றுகுட்டிக்கு அளிக்கலாம்.
-
அரைலிட்டர் காய்ச்சிய பாலுடன் (Milk) , 300 மில்லி தண்ணீர் (Water), அரைத்தேக்கரண்டி விளக்கெண்ணெய் (Castor oil), ஒரு கோழி முட்டையை ( Egg) கலக்கி இளங்கன்றுக்கு ஒரு வேளை உணவாக கொடுக்க வேண்டும்.
-
இதுபோல ஒரு நாளைக்கு மூன்று முறை வீதம், கன்று பிறந்த 4 நாட்களுக்கு கொடுக்க வேண்டும்.
-
பிறகு உடல் எடையில் பத்தில் ஒரு பங்கு என்ற அளவில் ஒரு நாளைக்கு 3 முறையும், 2வது வாரத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை கொடுக்க வேண்டும்.
-
இரண்டு வார வயதில் அடர்தீவனம் மற்றும் இளம் பசும்புல் கொடுக்கலாம்.
-
மூன்று மாதங்களுக்கு பிறகு, பாலை நிறுத்திவிட்டு அடர்தீவனம், பசுந்தீவனம் மற்றும் உலர்தீவனம் கொடுக்கலாம்.
-
ஆட்டுக்குட்டியை வேறு தாயிடம் பால் குடிக்கச் செய்யலாம்.
-
பசும்பாலுடன் சம அளவு தண்ணீர் சேர்த்து காய்ச்சி பாலாடை நீக்கி பாட்டிலில் பால் கொடுக்கலாம்.
-
உயிருடன் உள்ள குட்டியுடன், தாயை இழந்த குட்டியையும் சேர்த்து உப்புக்குளியல் கொடுத்து மாற்றுத் தாயுடன் விடுவதன் மூலம் தாயை இழந்தக் குட்டியை பராமரிக்கலாம். ஏனெனில் எது தன் குட்டி என தாயால் வேறுபடுத்திப் பார்க்க முடியாது.
தகவல்
உமாராணி,
பேராசிரியர்
கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆய்வு மையம் திருப்பரங்குன்றம்
மேலும் படிக்க...
கால்நடை விவசாயிகளின் சந்தேகங்களைத் தீர்க்க வந்துவிட்டது பசுமித்ரா!
எருதுகளை செல்லமாகக் கொஞ்சி வேலைக்குப்பழக்குவது எப்படி? புதிய யுக்திகள்!