மாடுகள் பெரிதும் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று உண்ணி அல்லது புற ஒட்டுண்ணி பாதிப்பு. இதனை இயற்கை மருந்துகொண்டு எளிதில் குணப்படுத்தலாம்.
இயற்கை மருந்து தயாரிக்க
தேவையான பொருட்கள் (Ingredients)
பூண்டு - 10 பல்
மஞ்சள் பொடி - 20 கிராம்
வேப்பிலை - 1 கையளவு
உண்ணிசெடி அரிசி மலர் - 1 கையளவு
வசம்பு - 10 கிராம்
வேப்பம்பழம் - 1 கையளவு
துளசி இலை - 1கையளவு
தயாரிப்பு முறை (Preparation)
-
அனைத்து பொருட்களையும் நன்கு அரைக்கவும்.
-
அத்துடன்லிட்டர் சுத்தமான தண்ணீர் சேர்க்க வேண்டும்.
-
மஸ்லின் துணி அல்லது வடிகட்டி கொண்டு வடித்துக் கொள்ள வேண்டும்.
-
தெளிப்பானுடன் இணைந்த பாட்டிலில் ஊற்றவும்.
பயன்படுத்தும்முறை (Using Method)
-
மாட்டின் உடல் முழுவதும் தெளிக்கவும் மாட்டுக் கொட்டகையில் உள்ள இடுக்குகள் மற்றும் பிளவுகள் மேல் தெளிக்கவும்.
-
தெளிப்பதற்கு பதில், வடிகட்டிய நீரில் துணியை நனைத்து கூட மாட்டின் உடல் மீது தடவலாம்.
-
சிகிச்சை, வாரம் ஒரு முறை குணமாகும் வரை தொடர வேண்டும்.
-
இந்த சிகிச்சையை வெயில் நேரத்தில் மட்டுமே செய்ய வேண்டும்.
மேலும் படிக்க...
கால்நடைகளை கட்டிப்போடாமல், மேய்ச்சலுக்கு விடும் இடம் எது தெரியுமா?