1. கால்நடை

மாடுகளின் மடிநோய்க்கு மகத்தான மருந்து- தயாரிப்பது எப்படி?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Massive cure for hepatitis in cows - how to prepare?

மாடுகளைத் தாக்கும் நோய்களில் முக்கியமானதாகக் கருதப்படும் மடிநோய்க்கு இயற்கை முறையில் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள் (Ingredients)

சோற்றுக்கற்றாழை    - 250 கிராம்,
மஞ்சள்                       - 50 கிராம்
(கிழங்கு அல்லதுபொடி,)
சுண்ணாம்பு               - 15 கிராம்,
எலுமிச்சை                 - 2,
வெல்லம்                    -100 கிராம்

தயாரிப்புமுறை  (Preparation)

முதல் மூன்று பொருட்களையும் சேர்த்து சிவப்பு பசைபோல, அரைத்துக்கொள்ளவும். இரண்டு எலுமிச்சையையும் இரண்டாக நறுக்கவும்

பயன்படுத்தும் முறை (Using Method)

  • அரைத்த கலவையை ஒரு கையளவு எடுத்து அதனுடன் 150-200 மிலி தண்ணீர் சேர்த்துக் கலக்கவும் மடியைக் கழுவி சுத்தம் செய்து, மடி முழுவதும் கலவையைத் தடவி விடவும்.

  • மீண்டும் இதே முறையை என நாள் ஒன்றுக்கு,10 தடவை வீதம், 5நாட்களுக்கு செய்ய வேண்டும்.

  • தினமும் இரண்டு எலுமிச்சையை ஒரு நாளுக்கு இருமுறை வீதம் 3 நாட்களுக்குக் கொடுக்கவும்

  • பாலில் இரத்தம் வந்தால் மேற்கண்டவற்றுடன், இரண்டு கைப்பிடி கருவேப்பிலை மற்றும் வெல்லம் இரண்டையும் பசையாக அரைத்து, வாய் வழியாக ஒரு நாளுக்கு இரண்டுமுறை நிலைமை சீரடையும் வரை கொடுக்கவும்.

  • இந்த மருந்து மடிநோய்க்கு நல்ல பலனைக் கொடுக்கும்.

மேலும் படிக்க...

கால்நடைத் தீவனங்களுக்கு பூஞ்சான் நச்சு பரிசோதனை அவசியம்!

கால்நடைகளை கட்டிப்போடாமல், மேய்ச்சலுக்கு விடும் இடம் எது தெரியுமா?

English Summary: Massive cure for hepatitis in cows - how to prepare? Published on: 15 October 2020, 10:46 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.