கரூர் மாவட்டத்தில் உள்ள 72 கிராமங்களில் அடுத்த வாரம் முதல் ஜனவரி வரை கால்நடை பாதுகாப்பு முகாம் நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி கூறுகையில்,
-
மாவட்டம் முழுவதும் வரும் செவ்வாய்கிழமை முதல் ஜனவரி 24ம் தேதி வரை கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடத்தப்பட உள்ளது.
-
மொத்தம் 72 கிராமங்களில் நடத்தப்படும் இந்த முகாம்களில் கால்நடைகளுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
-
இதில் கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், சினையுறா மாடுகளுக்கு சிறப்பு சிகிச்சை, சினையுற்ற மாடுகளுக்கு பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை, ஆண்மை நீக்கம், ஆடுகளுக்கு ஆட்கொல்லி நோய் தடுப்பூசி, கோழிகளுக்கு தடுப்பூசி, மாடுகளுக்கு நோய் நீக்க சிகிச்சைஆகியவை வழங்கப்பட உள்ளது.
-
எனவே கிராமங்களைச் சேர்ந்த கால்நடை வளர்போர் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க...
குளிர்கால மாட்டுக்கொட்டகை பராமரிப்பு- Sanitizers போடுவது அவசியம்!