1. கால்நடை

குளிர்கால மாட்டுக்கொட்டகை பராமரிப்பு- Sanitizers போடுவது அவசியம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Winter Cow Maintenance- Sanitizers are a must!

Credit : You Tube

கால்நடை வளர்ப்பில் முக்கியமானது எதுவென்றால், நோய்களில் இருந்து அவற்றைப் பாதுகாப்பதுதான். இதற்கு கொட்டகைகளின் பராமரிப்பு இன்றியமையாதது.

அதிலும் குளிர்காலங்களில் கால்நடை வளர்ப்போர் தகுந்த கொட்டகை பராமரிப்பு முறைகளைக் கையாள வேண்டியது மிக மிக அவசியம். இதனால் கால்நடைகள் ஆரோக்கியமாக இருப்புதோடு கால்நடைகளின் உற்பத்தித் திறனும் அதிகரிக்கும். நோய்ப் பராமரிப்புச் செலவும் குறையும்.

கொட்டகை பராமரிப்பு  (Shed Maintenance)

 • தினமும் கொட்டகையின் தரைப்பகுதியை நன்கு  தண்ணீர் கொண்டு கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

 • சாணம் மற்றும் வேறு கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்திக் கொட்டகைக்கு வெளியே எருக்குழிக்குள் போட்டு உரத்திற்கு பயன்படுத்தலாம்.

 • எனவே கழிவுகளை அவ்வப்போது அப்புறப்படுத்துவது அவசியமாகும்.

 • கிருமி நாசினி  (Sanitizer)  கொண்டு கொட்டகையின் தரைகளை சுத்தம் செய்தல் வேண்டும்.

 • சூரிய ஒளி நல்லதொரு கிருமி நாசினி என்பதால், கொட்டகையின் அமைப்பு ஒரு நாளில் சிறிது நேரமாவது சூரிய ஒளி படும்படி இருக்க வேண்டும்.

 • கொட்டகையில் கழிவுகளை அகற்றிவிட்டு தண்ணீர் ஊற்றிக் கழுவிய பின்பு தான், கிருமி நாசினி கொண்டு அனைத்து இடங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

 • வாரம் இரு முறை தரைப்பகுதியினை கிருமி நாசினி மருந்து கொண்டு சுத்தம் செய்ய வேண்டியது கட்டாயம்.

 • வாரம் இரு முறை கொட்டகையின் சுவரைசுத்தம் செய்ய வேண்டும்.

 • வாரம் ஒரு முறை கொட்டகையின் சுற்றுப்புறச் சுவரை சுத்தம் செய்ய வேண்டும்.

 • கொட்டகையின் சுவற்றில் உள்ள ஒட்டடைகளை வாரம் ஒரு முறை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்.

 • சுவற்றில் ஏதேனும் விரிசல்  இருந்தால் அவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும். ஏனெனில் சுவற்றின் விரிசலில் உள்ள இடைவெளிகளில் உண்ணிகள் ஒளிந்திருக்கக்கூடும்.

 • கொட்டகையின் சுற்றுப்புறத்தை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்.

 • சுண்ணாம்புத் தூள் 1 கிலோ மற்றும் ப்ளீச்சிங் பவுடர் 100 கிராம் கலந்த கலவையைக் கொட்டகையின் சுற்றியுள்ள இடங்களில் வாரம் ஒரு முறை தூவி விட வேண்டும்.

 • வருடம் ஒரு முறை கொட்டகையின் சுவர்களுக்கு சுண்ணாம்பு அடிக்க வேண்டும்

தகவல்

முனைவர் இரா.உமாராணி

பேராசிரியர்

கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையம்

திருப்பரங்குன்றம்

மேலும் படிக்க...

மீன் வளர்க்க காசு - வாங்க நீங்க ரெடியா!

நிறைந்த லாபம் ஈட்ட நாட்டுக்கோழி வளர்ப்பு - மானியம் பெறஉடனே விண்ணப்பியுங்கள்!

கூடுதல் மகசூலுக்கு பறவைகளும் முக்கியமே !

English Summary: Winter Cow Maintenance- Sanitizers are a must!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.