மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 October, 2021 11:41 AM IST

கால்நடைகளைப் பொருத்தவரை, அவற்றுக்கு அளிக்கும் தீவனம்தான் நமக்கான மூலதனம்.

தீவனம்

நல்லத் தரமானத் தீவனங்களைக் கொடுத்தால், அதற்கு ஏற்ற அளவில் பால் கிடைக்கும். ஆக, பால் கறக்கும் மாடுகளுக்கு எந்த அளவு சரியான தீவனம் அளிக்கிறோமோ அந்த அளவே பால் கிடைக்கும்.

புண்ணாக்கு போன்ற புரதச் சத்துள்ளவைகளையும் தவிடு, தானியங்கள் போன்றவை கலந்த சரிவிகித உணவும் மிக அவசியம்.

  • கால்நடைகளுக்குத் தேவையான உலர் தீவன அளவு அதன் உடல் எடையில் 3 % ஆகும்.

  • சில உற்பத்தித்திறன் அதிகம் கொண்ட மாடுகளுக்கு அதற்கு மேலும் தீவனங்கள் அளிக்கலாம்.

  • தட்ப வெப்ப நிலை தீவனத் தயாரிப்பு முறை, மற்றும் செரிமானத்திறன் அடிப்படையில் உட்கொள்ளுவதில் கால்நடைகளுக்கு அவை எடுத்துக்கொள்ளும் உணவின் அளவு வேறுபடும்.

  • ஒரு சாதாரண அளவு எடையுள்ள பசுவுக்கு 6% பண்படா புரதம் தேவைப்படும். அதோடு நிறைய பயிறு வகைப் பசும் புல்லும் கொடுத்தால் 3-4 கி.கி பால் பெற முடியும்.

கறவையின் உற்பத்திக்கு நலனுக்கேற்ற கலப்பு தீவனம் அவசியம்.

நல்ல தரமுள்ள உலர் தீவனம் கலப்பு தீவன அளவைக் குறைக்கும்.

தோராயமாக 20 கி.கி புற்கள் (கினியா, நேப்பியர் அல்லது 6-8 கி.கி பயிறு வகை (லியூசர்ன்) அளிப்பதன் மூலம் 1 கி. அடர்தீவனத்தைக் குறைக்க முடியும்.

1கி.கி வைக்கோல் 4-5 கிலோ புல் தேவையைக் குறைக்கும். இதன் மூலம் புரோட்டீன் பற்றாக்குறையைப் போக்கலாம்.


எப்போது அளிக்க வேண்டும்? (When to deliver?)

முறையான தீவனமளிப்பு முக்கியமாகும். காலை, மாலை, இரு வேளைகளும் அடர்தீவனத்தைப் பிரித்து பால் கறக்கும் முன்பு அளிக்க வேண்டும். அதேபோல் உலர் தீவனமும் காலையில் பால் கறந்த நீர் அளித்த பின்பும், மாலையில் பால் கறந்த பின்பும் அளிக்க வேண்டும். அதிக பால் தரும் மாடுகளுக்கு
நாளொன்றுக்கு 3 வேளை உணவு அளிக்கலாம்.

சரியான அளவு இடைவெளி அதன் செரிக்கும் திறனையும் பாலின் கொழுப்புச் சத்து அளவையும் அதிகரிக்கும். அதிக உலர் தீவனம் அளித்தால் மாடுகளின் செரிக்கும் தன்மை குறையலாம்.தானிய வகைகள் சரியான அளவு அரைத்துக் கொடுக்கலாம். நேப்பியர் போன்ற கடினத் தண்டு கொண்ட தீவனங்களை சிறிது துண்டாக வெட்டிக்கொடுக்கலாம்.வைக்கோனுடன் பயிறு வகை மற்றும் சிறிய ஈரப்பதமுள்ள புற்களைக் கலந்து அளிக்கலாம்.

அடர் அல்லது கலப்பு தீவனம் நீருடன் கலந்து அளிக்க வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட பசுந்தீவனங்களைப் பால் கறந்த பின்பு அளிக்கலாம்.

தீவன சேமிப்புக் கிடங்கு நல்ல காற்றோட்டத்துடன் உலர்ந்து சுத்தமாக இருக்க வேண்டும். பூஞ்சான் நாக்கிய கெட்டுப் போன் தீவனங்களை கால்நடைகளுக்கு அளிக்கக்கூடாது.

நல்ல பால் உற்பத்தி கொண்ட மாடுகளுக்கு அடர் உலர் தீவன விகிதம் 60:40 அளவில் இருக்க வேண்டும்.

தகவல்

சுப்பிரமணியன்

மேலும் படிக்க...

ரூ.1800க்கு விற்பனையாகும் வேப்பங்குச்சி- அமெரிக்காவில் நடக்குது இந்தக் கொடுமை!

துவரை நடவு செய்ய ரூ.5700 மானியம்- வேளாண்துறை அழைப்பு!

English Summary: Livestock feed management- low cost!
Published on: 29 September 2021, 11:43 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now