Animal Husbandry

Thursday, 06 August 2020 07:00 AM , by: Elavarse Sivakumar

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய கால்நடை இயக்கம் திட்டத்தின்கீழ் கால்நடைகளுக்கு காப்பீடு செய்து பயன்பெற ஆட்சியா் பி.உமா மகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளாா்.

தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2019-20 ஆம் ஆண்டில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் 5 ஆயிரம் கால்நடைகளுக்கு மானியத்துடன் காப்பீடு செய்யப்பட உள்ளது.

இத்திட்டத்தில் காப்பீடு செய்ய 2 சதவிகித ப்ரிமியத் தொகையில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள கால்நடை வளா்ப்போருக்கு 70 சதவிகிதம் மானியமும், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவா்களுக்கு 50 சதவிகிதம் மானியமும் வழங்கப்படுகிறது.

Credit: Dinamani

இரண்டரை ஆண்டு முதல் 8 ஆண்டு வயதுள்ள கறவை மாடுகள், எருமைகள் மற்றும் 1 ஆண்டு முதல் 3 ஆண்டு வயதுள்ள வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளை  இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து கொள்ளலாம்.

அதிகபட்சமாக ரூ.35 ஆயிரத்துக்கு மேல் காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு அதிகப்படியான மதிப்பிற்கான காப்பீட்டுக் கட்டணத்தை கால்நடை உரிமையாளரே செலுத்த வேண்டும்.

ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சமாக 5 கால்நடைகளுக்கு இத்திட்டத்தில் காப்பீடு செய்யலாம்.
ஆா்வமுள்ள கால்நடை வளா்ப்போா், அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகிப் பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

மாட்டுச்சாணத்தைக் காசாக்க நீங்க ரெடியா? இதோ சில வழிமுறைகள்!

நோய்களைத் துவம்சம் செய்யும் முர்ரா எருமை- பால் பண்ணை அமைக்கச் சிறந்த இனம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)